வியாழன், 11 ஜூலை, 2019

குமாரசாமி ராஜினாமா செய்கிறார் .. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!

Samayam Tamil : தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் த ஹைலைட்ஸ்
  • கர்நாடகாவில் இன்று காலை அமைச்சரவை கூட்டம்
  • கூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கும் முதல்வர்
  • கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆரம்பம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மோதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதனால் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.
    கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் மும்பையில் கைது!

    ஆனால் அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இவர்களில் 10 பேர் மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி பரபரப்பை கூட்டினர். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு விரைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    அவரைக் கைது செய்த போலீஸ், திருப்பி பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.

    பெரும்பான்மை போயிடுச்சி; ஒட்டுமொத்தமா பதவி விலகுங்க- கர்நாடகாவில் பாஜகவினர் தர்ணா!

    இதன் காரணமாக ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்தது. இதை சுட்டிக் காட்டி முதல்வர் குமாரசாமியை ராஜினாமா செய்யுமாறு, பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இத்தகைய களேபரங்களைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது ராஜினாமா முடிவை குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    மும்பையில் அனல்பறக்கும் கர்நாடக அரசியல்; ஆட்டம் காட்டும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!

    அதாவது, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்த ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இதனால் முதல்வர் குமாரசாமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

    தனது மனநிலையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. முன்னதாக நேற்று மாலை எடியூரப்பா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

    அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு பாஜக கோரிக்கை விடுக்கும். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அடுத்த முதல்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக