செவ்வாய், 9 ஜூலை, 2019

வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டது .. எம்பி ஆகிறார் .. உருக்கமான பேட்டி .. வீடியோ


tamil.oneindia.com -vishnu-priya : சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்பட்டது மகிழ்ச்சி. அது ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததாக வைகோ பேட்டி அளித்தார்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து வரும் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அதிமுக 3 இடங்களிலும் திமுக 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் திமுக 3 இடங்களில் ஒரு இடத்தை மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார்.
 இதனிடையே தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வைகோ நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டால் திமுக சார்பில் என் ஆர் இளங்கோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் வைகோவின் வேட்புமனு இன்று ஏற்கப்பட்டுவிட்டது.




பதவி பெற்றவர்கள்

இதன் மூலம் வைகோ ராஜ்யசபா எம்பியாவது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து வைகோ கூறுகையில் நான் போட்டியிடுவதால் மதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. மதிமுகவில் பதவி பெற்றவர்கள்தான் கட்சியை விட்டு சென்றனர்.



இருமுறை பதவி வந்தது

மத்திய அமைச்சர் பதவி இருமுறை வந்தபோதும் அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன். என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள், மதிமுக தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன். வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் ஏற்கும் பக்குவம் எனக்கு இருந்தது. எப்படியும் வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக