செவ்வாய், 9 ஜூலை, 2019

கர்நாடக காங்கிரஸ் அதிரடி : எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்!'- அ.தி.மு.க பாணியில் சித்தராமையா

சித்தராமையாகலிலுல்லா.ச- விகடன் : ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 3 பேர் என மொத்தம் 13 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
ராஜினாமாவைத் தொடர்ந்து அனைவரும் மும்பையில் உள்ள சோஃபிடெல் ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் மஜத நிர்வாகி தேவகவுடா, முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்து அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


ஆலோசனைக் கூட்டம்இதனிடையே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் வருகை தரவில்லை.



ராஜினாமா செய்த எம்.எல்.ஏ



ராஜினாமா செய்த எம்.எல்.ஏ
இதனால் கடுப்பான சித்தராமையா , ``ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது. வேறு எந்தப் பதவியிலும் தொடர முடியாது” என்றார். அதன்படி, ராஜினாமா செய்த கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் கடிதம் தரப்பட்டது. அவர்கள் 6 வருடங்கள் போட்டியிட தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக