செவ்வாய், 9 ஜூலை, 2019

சென்னை .ஓரினசேர்க்கை .. மனமுடைந்த இளைஞர் தற்கொலை .

வெப்துனியா :சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட வட இந்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் படேல் எனும் 20 வயது இளைஞர் சென்னையில் முடிதிருத்தும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். தனது தொழில் திறமையால் அனைவரையும் கவர்ந்த இவர் தனது மற்றொரு இயல்பால் அனைவராலும் கேலி செய்யப்பட்டுள்ளார். இவர் ஓரினச்சேர்க்கை மீது ஈர்ப்புக் கொண்டவர் என்பதால் இவரின் நடை, உடை மற்றும் பாவனைகளை அவரது நண்பர்கள், அவருடன் வேலை செய்வோர் மற்றும் உடன் தங்குவோர் ஆகிய அனைத்துத் தரப்பினரும் அவரைக் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன அவினாஷ் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதி வைத்துட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது பதிவில் ‘ஓரினச்சேர்க்கை விருப்பம் இயற்கையாகெவே எனக்குள் உள்ளது. என்னைக் கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இந்தியா போன்ற நாட்டில் என்னால் ஓரினச்சேர்க்கையாளனாக வாழ்வது இயலாதக் காரியம்’ என எழுதிவிட்டு அன்றிரவே நீலாங்கரை கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது பேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக