வியாழன், 18 ஜூலை, 2019

போக்கிரி கணவனை அடித்து கொன்று காரோடு எரித்த மனைவி ... நெய்வேலி ...

Hemavandhana tamil.oneindia.com   : நெய்வேலி: ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம்.. வீட்டுக்கு 10 பைசா தருவது இல்லை.. சின்ன வயசு பொண்ணுங்களை காரில் ஏற்றிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்த கணவனை, அடித்து கொலை செய்து சாக்கு பைக்குள் கட்டி விட்டார் மஞ்சுளா! 
கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், கடந்த கிழமை ராத்திரி ஒரு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார் ஓடிச்சென்றனர். ஆனால் அங்கிருந்த 3 பேரும் இவர்களை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். 
உடனடியாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ந்தனர் அதிர்ந்தனர் விரைந்து வந்த பெருமளவு தீயை எரிய விடாமல் தடுத்து, காருக்குள் சோதனை நடத்தினர். காரின் பின் சீட்டில் ஒரு சாக்கு மூட்டை அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தால், போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். 
 
 அந்த சாக்கு பையில், "நெய்வேலி என்எல்சி" பணியாளருக்கான அடையாள அட்டை இருந்தது. இதை வைத்து, கொலை செய்யப்பட்டது நெய்வேலி டவுன்ஷிப் நெல்லிக்கனி தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பதும் அவர் ஒரு என்எல்சி அதிகாரி என்பதும் தெரியவந்தது. ரியாக்‌ஷன் ரியாக்‌ஷன் அதனால் பழனிவேல் வீட்டுக்கு சென்ற போலீசார், கணவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். அதற்கு மனைவி மஞ்சுளாவிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.. அமைதியாக நின்று கேட்டு கொண்டிருந்தார். சந்தேகப்பட்ட போலீசார் வீட்டை சுற்றிலும் பார்த்தனர். அப்போதான் சுவற்றில் ரத்த துளிகள் இருந்தன. உடனே மஞ்சுளாவை ஸ்டேஷன் அழைத்து போய் விசாரித்தனர். 
 
காதலிகள் காதலிகள் எல்லா விஷயங்களையும் போலீசாரிடம் சொன்னார் மஞ்சுளா: "அவருக்கு மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். சிறப்பு அதிகாரியாக வேலை. 2 மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். சம்பளத்தில் வீட்டுக்கு செலவு செய்வதில்லை. பணம் கேட்டால் அடி விழும். வெளியில எங்கேயுமே கூட்டிட்டு போறது இல்லை. ஆனால், காதலிகளுடன் காரில் ஊர் சுற்றி திரிந்தார். 
 
இரும்பு கம்பி இரும்பு கம்பி இதை என் தம்பி ராமலிங்கம் தட்டி கேட்டதற்கு, வீட்டிற்குள் அவனை வரக்கூடாதுன்னு சொல்லிட்டார். நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகமானதால், கொலை செய்ய முடிவு செய்தோம். வேலை முடித்து வீட்டுக்கு வந்த என் புருஷனை, என் தம்பி ராமலிங்கம், அவனது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டார்கள். 
 
சடலத்தை மூட்டையாக கட்டி காதலிகளுடன் ஊர் சுற்றின அதே காரில் வைத்து, தீ வைக்க முடிவு செய்தார்கள்" என்றார். இதையடுத்து, மஞ்சுளாவை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ராமலிங்கத்தையும் அவனது நண்பர்களையும் தேடிவருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக