tamil.oneindia.com - VelmuruganP :
சித்தூர்
: ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில்
ஊடுருவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குப்பத்தில் பிடிப்பட்ட கள்ள
நோட்டு கும்பல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளது.
தமிழக ஆந்திர எல்லையில் கள்ளநோட்டுக்களை சிலர் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் குப்பத்தில் கள்ளநோட்டு கும்பல் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுக்கள் ஆகும்.
குப்பம் அருகே விஜலாபுரத்தில் ஒரு வீட்டையே கள்ள நோட்டுக்களை கத்தை கத்தையாக அடிக்கும் அச்சமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரில் மணிகண்டன் (28), சுரேஷ்குமார்(23), குபேந்திரன்(50) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருவிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் (33) குப்பத்தைச் சேந்தவர் , சுரேஷ் ரெட்டி (31), ஹேமந்த் (26) ஆகியோர் திருப்பதியை சேரந்தவர்கள் என்பதும் தெரியிவந்துள்ளது.
இவர்கள்
பல கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில்
விட்டு இருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக ஆந்திர எல்லையில் கள்ளநோட்டுக்களை சிலர் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் குப்பத்தில் கள்ளநோட்டு கும்பல் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுக்கள் ஆகும்.
குப்பம் அருகே விஜலாபுரத்தில் ஒரு வீட்டையே கள்ள நோட்டுக்களை கத்தை கத்தையாக அடிக்கும் அச்சமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரில் மணிகண்டன் (28), சுரேஷ்குமார்(23), குபேந்திரன்(50) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருவிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் (33) குப்பத்தைச் சேந்தவர் , சுரேஷ் ரெட்டி (31), ஹேமந்த் (26) ஆகியோர் திருப்பதியை சேரந்தவர்கள் என்பதும் தெரியிவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக