வியாழன், 25 ஜூலை, 2019

சிலை கடத்தலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பில்லியாம்

minister nakkheeran.in/author/kalaimohan : நேற்று உயர்நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக தன்னை அவருடன் கூட்டுச் சேர்த்து கைது செய்திருப்பதாகவும், எனவே  பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமெனக் கோரியும் முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா தொடர்ந்த வழக்கில் விசாரணை  நடைபெற்றது. விசாரணையின் போது  சிலைக் கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொன்மாணிக்கவேல் தரப்பு தகவல் அளித்திருந்தது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிசவாசன், எனது பெயரையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்திருக்கிறது. யாருக்கு தொடர்பு என்று பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும், ஆனால் அந்த தனியார் தொலைக்காட்சி எப்படி எங்களுக்கு அதில் தொடர்புள்ளது என செய்தி வெளியிடலாம். அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.


அதையடுத்து பேசிய சேவூர் ராமச்சந்திரன், இன்று காலை குறிப்பிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி சிலைக் கடத்தலில் எங்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தவறான செய்தியை  புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. என்னையும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், இந்த ஆட்சியையும் வேண்டுமென்றே கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி மீது புகார் கொடுத்துள்ளோம், பிரெஸ் கவுன்சிலிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக