திங்கள், 22 ஜூலை, 2019

என் ஆர் ஐக்களின் இந்தி வெறி .. புலம்பெயர் தமிழர்கள் மீது இந்தி வாந்தி

இப்போதெல்லாம்  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தி மொழி பேசுவோர்கள்
தமிழர்களை சந்திக்கும் போதெல்லாம் சர்வசாதரணமாக இந்தியில் பேச முயற்சிக்கிறார்கள் .
நம்மவர்களுக்குத்தான் எப்போதும் தாங்களுக்கு இந்தியில் தெரிந்த சில சொற்களை கூறுவதில் ஒரு குஷி இருக்குமே ..  அதை பயன்படுத்தும் அவர்களின் மனோ நிலையில் ..
இந்தி ஒரு தவிர்க்க முடியாத மொழி என்ற கருத்தை தமிழர்களின் மேல் திணிக்கும் உளவியல் தாக்குதலை மேற்கொள்கிறார்கள் .
ஆங்கிலத்தில் மட்டுமே பேசி கொண்டிருந்த இந்திகாரர்கள் gobackmodi என்ற ஹாஷ்டாக்கும் உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ் குரலும் தங்கள் இந்தி மேலாதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாக இப்போது கருதுகிறார்கள்.
இதுவரை சாலா மதராசி என்று இளக்காரமாக பேசி வந்தர்வர்கள் தற்போது எங்கும் எதிலும் இந்தி என்ற வெறி பிடித்த என் ஆர் ஐக்களாக உள்ளனர்.
மேலும் தங்களின் ஹிந்தியா சாயம் உலக அரங்கில் வெளுப்பதற்கு இந்த் சாலா மதராசிகள்தான் காரணம் என்றும் கருதுகிறார்கள்.
அந்த துவேஷத்தை அவர்கள் வாந்தி எடுக்கும் முதல் முயற்சிதான் இந்த இந்தி பேசும் அடாவடி.

நேற்றுவரை ஆங்கிலத்தில் உரையாடி கொண்டிருந்த பாணிபூரிகள் தற்போது இந்தியில் செய்யும் அடாவடி மட்டுமல்ல.. அதை விட ஒரு முக்கியமான ஒரு விடயம் அவர்களின் இந்த சாலா மதராசி கோட்பாடு ஒரு ஜாதி ரீதியான கருத்தியலுமாகும் .
தோலின் நிறமும் அவரகளின் பார்வையில் சால மதராசிதான் இந்த சாலா மதராசியின் உள்ளடக்கத்தில் புலம் பெயர்இலங்கை தமிழர்களும் உள்ளனர் இது பற்றி புலம் பெயர் ஈழ தமிழர்களுக்கு இன்னும் போதிய புரிதல் இல்லைஎன்று கருதுகிறேன் .  முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக