ஞாயிறு, 14 ஜூலை, 2019

ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…

vikatan_2019-07_67ab89b7-4639-46be-8f0a-ef1823e4d591_p38 ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்... ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்... vikatan 2019 07 67ab89b7 4639 46be 8f0a ef1823e4d591 p38
ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…
விகடன்:  ூலை 10-ம் தேதி, ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைப் பணியாளர்கள் சங்கம்’ சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின்போது, கொத்தடிமைகளாக துன்பம் அனுபவித்து வந்த 42 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பதுதான் வேதனை. வேலூர் மாவட்டம், பருவமேடு பகுதியில் செயல்படும் மரம் வெட்டும் தொழிற்சாலையை, ராணிப்பேட்டை சப் கலெக்டர் இளம்பகவத் தலைமையிலான குழு சோதனையிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் கொன்னேரிக் குப்பம் பகுதியில் காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன் தலைமையிலான குழு சோதனையிட்டது.< இந்தச் சோதனையில், வேலூரில் கொத்தடிமை களாக இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.< விசாரணையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்காக, கட்டாயப்படுத்தி இவர்களை மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தி யிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் தாசில்தார் ரமணியைக் கண்டவுடன் அவர் காலில் விழுந்த 60 வயது முதியவர் ‘‘ஆயிரம் ரூபாய் கடனுக்காக அஞ்சு வருஷமா மரம் வெட்டுறேன்மா. எங்களை எப்படியாவது காப்பாத்துங்க’’ என்று கதறியிருக்கிறார்.
மீட்கப்பட்ட அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த இவர்களை, கடனுக்காக, உறவினர்களே கொத்தடிமைகளாக வைத்திருந்துள்ளனர்.
இவர்கள் வாங்கிய கடன் ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் வரைதான். ஆனால், வட்டிக்கு வட்டி போட்டு, ‘பெருந்தொகையைத் திருப்பித் தர வேண்டும்’ என மிரட்டிக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓர் அதிகாரி, “வாங்கிய கடனுக்காக ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கியிருக்கிறார்கள். உடம்பு சரியில்லாத சமயங்களில் சிகிச்சைக்குக்கூட அவர்களை வெளியே அனுப்பாமல் கொடுமைப்படுத்தியிருக் கிறார்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அனுமதிக்கவில்லை.
சின்னக் குழந்தைகளிடமும் வேலை வாங்கியுள்ளனர். அவர்களை மீட்டு, சொந்த ஊரிலேயே மீள்குடியேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளோம். குற்றவாளிகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.” என்றார்.
‘இன்டர்நேஷ்னல் ஜஸ்டிஸ் மிஷன்’ நிர்வாகி புகழ்செல்வம், ‘‘மீட்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும்.
2018-ம் ஆண்டில் நடைபெற்ற எங்கள் மாநாட்டில், ‘கொத்தடிமைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைத்திடுவோம்’ என துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். அதைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
இன்டர்நெட் யுகத்திலும் கொத்தடிமை பழக்கம் தொடர்வது வேதனையிலும் வேதனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக