ஞாயிறு, 14 ஜூலை, 2019

தேசிய செய்திகள் மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள்; முகுல் ராய்

மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள்; முகுல் ராய் தினத்தந்தி : மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என மூத்த தலைவர் முகுல் ராய் கூறியுள்ளார்.
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு பாரதீய ஜனதா கணிசமாக வெற்றி பெற்று உள்ளது. இது ஆளும் கட்சிக்கு பெருத்த அடியாக கருதப்படுகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில் ‘மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் வெகு விரைவில் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மீது அக்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி உயர்மட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எல்லோரும் விரைவில் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளனர். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக