புதன், 24 ஜூலை, 2019

பார்ப்பன ஜாதி மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!... பார்ப்பனர்கள் உயர்ந்த பிறவியாம் ..நீதிபதியின் ஜாதி வெறி

சாதி மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!
அனிதா சுமந்த டிவி விவாதங்களில் வரும் சுமந்த ராமின் மனைவிதான்

மின்னம்பலம் : இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. தமிழ்
பிராமணர் உலக மாநாட்டில் தற்போது உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களாக இருக்கும் இருவர் பங்கேற்றுள்ளனர். கூடவே, இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி நகரில் "தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு" (Tamil Brahmins’ Global Meet 2019) ஜூலை 19 முதல் 21 வரை நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்பவரும் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.
அரசின் உயர் பதவிகள், அதுவும் அரசியல் சாசன பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சாதி மாநாட்டில் கலந்துகொண்டு பேசுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசும் போது, 'பிராமணர்கள் இருபிறப்பாளர்கள். அவர்கள் தலைமை பொறுப்பில் தான் இருக்க வேண்டும்
(Now who is a Brahmin? A Brahmin is dwijhanmana – twice born… a Brahmin should always be at the helm of affairs). மேலும், சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்காக போராட முன்வர வேண்டும் (It is time for you to deliberate as to whether reservation should be on the basis of community or caste alone.... reminding you that there is a platform for you to agitate or to voice your concern about economic reservation alone, and not caste or communal reservation)' - என்பதாக பேசியுள்ளார். தனது சாதியின் நலனுக்காக ஒரு நீதிபதியே பகிரங்கமாக பேசுவது குறிப்பிடத்தக்கதாகும்.
-அருள் ரத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக