திங்கள், 29 ஜூலை, 2019

ஏன் பெண்கள் பாலியல் வன்முறை பத்தி பேச மாட்டேங்கிறாங்க ?

Brinda Ponni  : June 2017: ஒரு 17 வயசு பொண்ணு பாஜக எம்.எல்.ஏவால உனோ நகரத்தில் பாலியல் வன்கொடுக்கு ஆளாகுறா
June 2017 - April 2018: போலிஸ் புகாரை வாங்க மறுக்குறாங்க. பெற்றோர்கள் கோர்ட்டுக்கு போறாங்க
April 3, 2018: அப்பாவை எம்எல்ஏ ஆட்கள் அடிக்கிறாங்க
April 3, 2018: போலிஸ் அப்பாவை கைது செய்றாங்க
April 8, 2018: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்னாடி அந்த பொண்ணு தற்கொலை செய்ய முயற்சிக்கிறா
April 9, 2018: அப்பா கொலை செய்யப்படுறார்
April 10, 2018: போலிஸ் எம்.எல்.ஏ அடி ஆட்கள் 4 பேரை கைது செய்றாங்க. CBIகு கேஸ் மாறுது.
April 13, 2018: அலகாபாத் கோர்ட் எம்.எல்.ஏவை கைது செய்ய உத்தரவு இடுது
11 July 2018: CBI பாலியல் வன்கொடுமைக்கும், அப்பாவோட கொலைக்கும் chargesheet file செய்றாங்க.
18 August, 2018: அப்பாவின் கொலையை பார்த்த witness தீடீர்னு இறந்து போறார். அவர் மாமா அவர் விஷம் குடுத்து கொல்லப்பட்டதா சொல்றார்.
21st November 2018: அவர் மாமா 18 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்துக்காக கைது செய்யப்படுறார்.
26 December 2018: பிறந்த நாள் மாற்றி சொன்னதாக பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், அவ மாமா மேல FIR போடப்படுது.
28th July 2019: மாமாவை பார்க்க ஜெயிலுக்கு போகும் போது, ஒரு வண்டி இந்த பொண்ணோட கார் மேல மோதுது. பொண்ணு, அவளோட வக்கில் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. கூட வந்த 2 அத்தைங்க இறந்திடுறாங்க.

ஆக அப்பா அடிச்சி கொலை, மாமா கைது, அத்தைகள் இறந்திட்டாங்க. Witness கொலை. பொண்ணும் வக்கிலும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.
கேளுங்க, ஏன் இந்த முட்டா பெண்கள் பாலியல் வன்முறைகளை பத்தி பேச மாட்டேங்கிறாங்க
* ஓரு ஆங்கில பதிவின் தமிழாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக