புதன், 3 ஜூலை, 2019

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக நாளை பதவியேற்கிறார்

வெப்துனியா :உதயநிதி ஸ்டாலின் நாளை திமுகவின் முக்கிய பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தாத்தா இருந்தவரை சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின். தாத்தா இறந்து, அப்பா ஸ்டாலின் தலைவராக பதவியேற்றது அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
கடந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைதேர்தலில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். கட்சியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் நற்பெயரை பெற்றார். இந்நிலையில் சமீப காலமாக ஸ்டாலின் வகித்து வந்த “இளைஞர் அணி செயலாளர்” பதவியை தலைமை உதயநிதிக்கு அளிக்கப்போவதாக பேசப்பட்டு வந்தது.

அதெற்கேற்றார்போல் தற்போதிய இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது பதவியேற்பு விழா அண்ணா அறிவாலயத்தில் தலைவர் ஸ்டாலின், பொது செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக