புதன், 24 ஜூலை, 2019

எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 - எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 -- அவாளுக்கு கட் ஆப் 28.5 ..

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு குறைந்த கட்-ஆப்!மின்னம்பலம் : ஸ்டேட் பேங்க் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டேட் வங்கியில் கிளாரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் எழுத்தர் பணித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 23) வெளியாகின. அத்தோடு கட் ஆப் மதிப்பெண்களும் இடம்பெற்றிருந்தது. அதில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 ஆக உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், EWS (Economically Weaker Sections] பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட கட்-ஆப் மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 28.5 என்ற அளவில் உள்ளது. இது 10 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது. 10 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக