செவ்வாய், 16 ஜூலை, 2019

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -4

thodargal bjp scam part 4thodargal bjp scam part 4nakkheeran.in/authorathanurchozhan : பருப்பு வாங்கியதில் ஊழல் (குஜராத்-மகாராஸ்டிரா)! DAL SCAM (GUJARAT AND MAHARASTHRA) 2015 முதல் 2016 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்திலும் மகாராஸ்டிராவிலும் பாஜக அமைச்சர்களின் உதவியோடு பருப்பு வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அரசாங்க உதவியோடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இந்த பற்றாக்குறை என அம்பலப்படுத்தப்பட்டது. மத்தியில் மோடி அரசும், இரண்டு மாநில பாஜக அரசுகளும் செய்த சதி காரணமாக இந்த மாநிலங்களில் மக்கள் பருப்புக்காக வழக்கத்தை விட 150 முதல் 200 சதவீதம் வரை அதிகமாக பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.
பருப்பு விலை கிலோவுக்கு 130 முதல் 200 ரூபாய் ஆகியது. இந்த பற்றாக்குறையால் பாஜக அமைச்சர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றனர்.
 ராணுவக் கண்காட்சி ஊழல் (கோவா)- DEFENCE EXPO SCAM (GOA). thodargal bjp scam part 4கோவாவில் ராணுவ கண்காட்சி நடத்துவதற்காக பெதுல் என்ற இடத்தில் 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு கோவா அரசு வழங்கியது. இதுதொடர்பாக ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி ராணுவ கண்காட்சிக்கு இடம் ஒதுக்கும் படி கேட்டிருந்தார். கடற்கரையை ஒட்டி 150 ஏக்கர் நிலத்தை ஒதுக்கும் படியும், அப்போது தான் 10 ஆயிரம் அடி நீள விமான ஓடுதளம் அமைக்க முடியும் என்றும், கோவாவில் இது போன்ற கண்காட்சிகளை நடத்த வசதியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதில் ஊழல் என்னவென்றால், மத்திய அரசுக்கு கோவாவில் நிலம் ஒதுக்க மாட்டோம் என்று அரசு தீர்மானம் போட்டதே பாரிக்கர் முதல்வராக இருந்த போது தான்.




மருத்துவக்கல்லூரி தேர்வில் ஊழல்! (DMAT SCAM).


thodargal bjp scam part 4


மத்தியப்பிரதேச மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள் அடுத்தடுத்து தலைவிரித்தாடின. மருத்துவ கல்லூரி அனுமதித் தேர்வில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமானது. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. இந்த ஊழல் வியாபம் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பண மதிப்பிழப்பு ஊழல்! (DEMONETISATION).
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொட்டப்பட்டது என்று மீடியாக்களில் தகவல்கள் வந்தன. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் 10 பண பரிவர்த்தனைகளை ஆதாரமாக கொண்டு இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சிக்கு ஏராளமாக நிலம் வாங்கப்படுகிறது. நாங்கள் கையெழுத்து மட்டுமே போடுகிறோம். மற்ற படி பணம் முழுவதும் கட்சியிலிருந்தே வருகிறது என்று பாஜக எம்எல்ஏவான சஞ்சீவ் சவ்ரஸியா கூறினார். இந்த நிலம் அனைத்தும் கட்சி அலுவலகங்கள் கட்டவும், வேறு காரணங்களுக்காகவும் வாங்கப்படுவதாக அவர் கூறினார். 
முந்தைய பகுதி:
ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி3<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக