திங்கள், 15 ஜூலை, 2019

300 கோடி மதிப்பில் 13 இடங்களில் மேம்பாலங்கள்... -முதல்வர்!

300 கோடி மதிப்பில் 13 இடங்களில் மேம்பாலங்கள்... -முதல்வர்!
zeenews.india.com/tamil : ரூபாய் 300 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கான திட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்! ரூபாய் 300 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கான திட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்!
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய கைலாஷ், சேலையூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ 1, 122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும். 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப் பாலம் ஆகியன அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
சென்னை டைடல் பார்க் சந்திப்பில் 2 "U" வடிவ மேம்பாலங்கள் ரூ 110 கோடியில் கட்டப்படும். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் சாலைகள் ரூ. 58.50 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகர் பகுதியில் ரூ 299 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 17 மாவட்டங்களில் ரூ 155.80 கோடியில் 42 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பாடி குப்பத்தில் உயர்மட்டப் பாலம், கேந்திரி வித்யாலயா, தாம்பரத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக