மாலைமலர் ;
மத்திய அரசு அவசர அவசரமாக மசோதாக்களை
நிறைவேற்றி வருகிறது என்று 18 எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா
நாயுடுவிடம் புகார் அளித்துள்ளனர்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும்
பாரதீய ஜனதாவுக்கு மக்களவையில் தனி மெஜாரிட்டி இருப்பதால் கிடப்பில்
கிடக்கும் மசோதாக்கள், திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல்
செய்து நிறைவேற்றி வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்குள் என்ஐஏ,
முத்தலாக், ஆர்டிஐ திருத்தம் போன்ற முக்கியமான மசோதாக்கள் உள்பட பல
மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளனர். முக்கியமான மசோதாக்களை
பாராளுமன்றத்தின் தேர்வு கமிட்டி மற்றும் நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆராய
வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன.
ஆனால் பா.ஜனதா அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில் அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன என மாநிலங்களவையைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் துணை ஜனாதிபதியும், மாநிலங்களை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் புகார் அளித்துள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக