ஞாயிறு, 7 ஜூலை, 2019

சென்னையில் முகிலன்.. 140 நாட்கள் எங்கிருந்தீர்கள்?.. யாராவது கடத்தினரா?.. சிபிசிஐடி போலீஸ் விசாரணை

Vishnupriya Rtamil.oneindia.com : சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலன் 140 நாட்கள் எங்கிருந்தார் என்றும் யாராவது அவரை கடத்தினரா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் வெளியிட்டார். 
இதையடுத்து அன்றிரவே சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயிலில் முகிலன் புறப்பட்டார். அப்போது அவர் நாகர்கோவிலை வந்தடையவில்லை. மேலும் முகிலனின் தொலைபேசி இணைப்பும் கிடைக்கவில்லை. உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் இதனால் முகிலன் காணாமல் போனதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகிலனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி பூங்கொடியும் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 
 
ஆந்திர போலீஸ் ஆந்திர போலீஸ் இந்த நிலையில் முகிலன் குறித்த துப்பு கிடைத்ததால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார். காட்பாடியில் முகிலன் காட்பாடியில் முகிலன் பின்னர் அவரை வேலூர் போலீஸாரிடம் ஒப்படைப்பதற்காக காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். 
 
அங்கு வைத்து அவரை வேலூர் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் முகிலன் நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி போலீஸ் வசம் உள்ள முகிலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
140 நாட்கள் எங்கிருந்தீர்கள். யாரேனும் உங்களை கடத்தினரா போன்ற தகவல்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் முகிலன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக