வெள்ளி, 12 ஜூலை, 2019

பட்ஜெட் , ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள் மாயமாகியுள்ளது .. ஊடகங்கள் மௌனம் Mystery of the 'Missing' Rs 1.7 lakh Crore in India's Budget


kalaignarseithigal.com  : நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கணக்கில் வராமல் விடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள புள்ளிவிபரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரதின் ராய் என்பவர், பட்ஜெட்டில் உள்ள குளறுபடிகளைத் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் அவர் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், “பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19ம் ஆண்டில் இந்திய அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடி எங்கே போனது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், பட்ஜெட் என்பது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை (Revised Estimates) கொண்டு வடிவமைக்கப்படுகிறது. ஆனால் இந்த பொருளாதார சர்வே என்பது இடைக்கால இருப்பை (Provisional Actuals) அடிப்படையாக வைத்து அமையும். இவைதான் அரசாங்க கணக்கு வழக்கின் துல்லியமான தகவல் தரும் மதிப்பீட்டாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த முறையைப் பயன்படுத்துக்கின்றனர்.





ரதின் ராய்





ரதின் ராய்
இந்நிலையில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் வருவாயைக் காட்டிலும், பொருளாதார அறிக்கையில், அரசின் வருவாய் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் கணக்கில் மட்டுமல்ல, செலவின கணக்கிலும் குளறுபடி நடந்துள்ளது. பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி 2018-19ம் ஆண்டு மொத்த செலவினம் 24.6 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் 23.1 லட்சம் கோடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, 1.5 லட்சம் கோடி வித்தியாசம் உள்ளது. வரி வருவாயில் தான் கணக்கு குளறுபடி நடந்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, கடந்தாண்டு வரி வருவாய் 14.8 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் வரி வருவாய் 13.2 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.





பிரணாப் சென்





பிரணாப் சென்
மேலும் இதுகுறித்து தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரணாப் சென் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த பட்ஜெட் கணக்கில் உள்ள குளறுபடிகள் பெரும் கவலைக்குரிய விஷயம். வேதனையும் அளிக்கிறது. எனவே இதை சரி செய்திருக்க வேண்டும். எப்படி நடந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அவர் மட்டுமின்றி, பொருளாதார மற்றும் திட்டமிடல் ஆய்வு மையத் தலைவர் ஜெயதி கோஷூம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “இதனை முக்கியப் பிரச்சனையாக பார்க்கிறேன், பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரி என்றால், புதிதாகத்தான் பட்ஜெட் விவரங்கள் தயார் செய்ய வேண்டும், அந்த அளவுக்கு இந்த புள்ளிவிவர குளறுபடி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.





ஜெயதி கோஷூ





ஜெயதி கோஷூ
இவர்கள் கூறிய தகவல்களை, மேற்கோள்காட்டி அவர் அந்த கட்டுரையை எழுதியுள்ளார். மேலும் இதுதொடர்பாக கேள்விகளை நிதியமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் பதில் கிடைத்ததாக தெரியவில்லை என்று அவர் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பா.ஜ.க-வினர் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை, மேலும், பா.ஜ.க வெளியிட்ட பட்ஜெட்டில் உள்ள பல்வேறு புள்ளிவிபர மோசடிகள் குறித்து பா.ஜ.க மூத்ததலைவர் எம்.பி சுப்பிரமணிய சாமி ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக