திங்கள், 10 ஜூன், 2019

திண்டுக்கல் நீதிபதியின் பார்ப்பனீய தீர்ப்பு ! கோயிலை கூட்டி பெருக்கவேண்டுமாம் .. இது ஒரு தீர்ப்பு?

திண்டுக்கல்  வளர்தங்கம் அவர்கள் பழனி முருகன் குறித்து தனது கருத்தை முகநூலில் பதிவிட்டார் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கறிஞர் ஆனந்த்முனிராஜ் அவர்கள் நீதிபதியிடம் வாதிட்ட விபரம்.
வழக்கறிஞர்:
வளர்மதி மீது 66(A) IT Act - ன் படி FIR பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சட்டப்பிரிவு Shreya Singhal V. Union of India தீர்ப்பின்படி முறையிட்டாளருக்கு முன்பிணை ஆணை வழங்கி உத்தரவிட கோருகிறேன்.
நீதிபதி:
அப்படி என்றால் முறையிட்டளர் மறு உத்தரவு வரும் வரை பழனி முருகன் கோவில் வாசலை தினமும் கூட்டி பெருக்கி கோலம் போட முன்வந்தால் முன் பிணை உத்தரவு வழங்குகிறேன் என்றார்.
வழக்கறிஞர்:
பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயலை தன் வீட்டு வாசலையே கூட்டி பெருக்கி கோலம் போடுவதை பெரியார் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அப்படி இருக்க
ஒரு பகுத்தறிவாளர் எப்படி கோவிலைத் கூட்டிப்பெருக்கி கோலம் போட முடியும்?
அப்படி ஒரு உத்தரவு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ஒருபொழுதும் நாங்கள் பெரியார் கொள்கைக்கு விரோதமான செயலை செய்ய மாட்டோம் என்றார் வழக்கறிஞர்
நீதிபதி:
முன்பிணை கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி
இவர் நீதிபதியா அல்லது பார்ப்பனியத்தின் கைக்கூலியா என்பதை சிந்தித்துப் பாருங்கள் பார்ப்பனியம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை சிந்தியுங்கள் இளைய சமுதாயமே


தினமலர் :  பழநி : இந்து கடவுளை இழிவுபடுத்தி, முகநுாலில் பதிவு செய்த, பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், பழநி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஜெயகொண்டம் பகுதியைச் சேர்ந்த, வளர்தங்கம் என்ற பெயரில் முகநுாலில், பழநி முருகன் கோவில் பாதுகாப்பு குறித்து, கடவுளை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளனர். பல கோடி பக்தர்கள் வணங்கும் கடவுள் குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் அந்த பதிவு உள்ளது.

இது, இந்து மதத்தையும், ஆன்மிக பெரியவர்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயல். இந்துக்களின் மனதை புண்படுத்திய, தி.மு.க., முத்திரையுடன் முகநுாலில் வலம் வரும் வளர்தங்கம் என்ற பெண் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக