திங்கள், 10 ஜூன், 2019

கிரிஷ் கர்னாட் காலமானார் .. புகழ் பெற்ற நடிகரும் சமுக செயல்பாட்டாளரும்..

நாடக கலைஞரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 81.& கிரிஷ் கர்னாட் நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.  பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னாட், காதலன், செல்லமே உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பல உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Muthu Krishnan : கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களுடன் இயங்கிய கிரிஷ் கர்நாட் காலமானார்.
என் பள்ளி பருவத்தில் கிரிஷ் கர்னாட் யஷ்பால் அவர்களுடன் இணைந்து தூர்தர்ஷனில் வாரா வாரம் நடத்தும் TURNING POINTஎனும் அறிவியல் நிகழ்ச்சியை நான் தவறவிட்டதில்லை. பல திரைப்பட விழாக்களில், இலக்கிய விழாக்களில் அவரை சந்தித்திருக்கிறேன். ஒரு முறை அவரை அவரது பெங்களூரு இல்லத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

கிரிஷ் கர்னட் நடித்த மன் பசந்த் எனும் இந்தி திரைப்படம் என் பள்ளி பருவ நினைவுகளில் முக்கியமானது. 1970 முதல் 2018வரை கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என ஏராளமான மொழி திரைப்படங்களில் கிரிஷ் நடித்துள்ளார். ஹே ராம் திரைப்படத்தில் அவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார், கடைசியாக அவர் நடித்த தமிழ் படம் முகமூடி என்று நினைக்கிறேன்.
அவரது நாடகங்கள் அனைத்துமே பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடகம், சினிமா என இரண்டையும் தன் கண்களாக கருதியவர், இந்தியாவின் பல உயரிய விருதுகளை கிரிஷை தேடி வந்தன.
கவுரி லங்கேஷை கொலை செய்ய வந்தர்களிடம் இருந்த பட்டியலில் கிரிஷ் கர்நாட்டின் பெயரும் இருந்தது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட ஒராண்டு நிறைவு அன்று ME TOO URBAN NAXAL என்கிற பதாகையை தன் கழுத்தில் மாட்டியபடி அந்த நிகழ்வில் கிரிஷ் கலந்துகொண்டது என்பது அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக