ஞாயிறு, 23 ஜூன், 2019

நடிகர் சங்க தேர்தல் நிறைவு பெற்றது!

மாலைமலர் : சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக