ஞாயிறு, 23 ஜூன், 2019

எச்_ராஜாவின் வண்டவாளத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கிய BJP பிரமுகர்_

பாலசுப்ரமணிய_ஆதித்தன்.: நம்பிய தொண்டர்களின் மாசற்ற அன்பை வைத்து பண மகசூல் செய்யும் மாமா,மருமகனின் குடும்ப அரசியல்...
1988 ஆம் ஆண்டு ஒரு ஓட்டை பஜாஜ் ஸ்கூட்டருடன் காரைக்குடி, சுப்பிரமணியபுரத்தில் 9 ஆவது வீதியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஹெச். ராஜா இன்று மருமகனோடு பல நூறு கோடிக்கு அதிபதி.
உழைப்பில் வந்தால் தவறு இல்லை.
ஆனால் படித்தும் பாவம் செய்த பணம்.
1988 ஆம் வருடம் ஸ்ரீ ரமணி ஐயர்,
1993 ஆம் வருடம் பத்மனாதன் ஐயர்,
2001 ஸ்ரீதரன் ஐயர்,
2002 சந்திரசேகரன் ஐயர்,
பின்னர் 2002 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஹெச்.ராஜா வின் மைத்துனர் சபேசன் ஐயர்.இவர்கள்தான் H.ராஜா உடன் குடும்ப அரசியலில் பயணித்தவர்களின் வரிசைப் பட்டியல்.
அதன் பிறகு 2014 முதல் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஹெச். ராஜா வின் மருமகன் சூரியநாரயணன் சிவகங்கை மாவட்ட பாஜக வில் பலரை அரசியல் ரீதியாக ஒழித்ததுடன் கோடிகளை தான் சேர்க்கவில்லை என்பதை மறுக்கவே இயலாது.
லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனி1995 ஆண்டில் தொடங்கப் பட்டது.
அப்போது H.ராஜா மாநிலச் செயலாளர்.
லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியின் டைரக்டர் H.ராஜா.
இதன் முக்கிய டைரக்டர் ராமச்சந்திரன்.
இவர் H.ராஜா வின் மைத்துனர்.
திருச்சி பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் சிறிது சிறிதாக சேர்த்து ரூ10,50,000 பணம் டெபாசிட் செய்தனர். இவர் திருச்சி பாஜக மாவட்டச் செயலாளர். 2004 ஆண்டில் பணத்தை திரும்ப கேட்கின்றனர் திருச்சி பாஜக பழனியப்பன்-ரேவதி தம்பதிகள். இன்று தருகிறேன்,நாளை தருகிறேன் என்று அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

ராஜாவின் மைத்துனர் ராமச்சந்திரன் செக் கொடுத்து சமாளிக்கிறார். செக் ரிட்டன் ஆகிறது. H.ராஜாவிடம் ஞாயம் கேட்கின்றனர். பணம் வராமல் இருக்கவே H.ராஜா வீட்டு முன் திருச்சி மாவட்ட பாஜக செயளாளர் தம்பதியர் சகிதமாக தர்ணா செய்கின்றனர்.
காரைக்குடி லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் முதலீடு செய்த பாஜக பழனியப்பன் 200 தடவைக்கு மேல் பயணம் செய்து H. ராஜாவை சந்திக்க நடையாய் நடக்கிறார்.
ராமச்சந்திரன் தலை மறைவானார்.
இந்த கம்பெனியின் ஆடிட்டர் மதுரையை சேர்ந்த முரளியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
http://www.mycorporateinfo.com/busin…/lotus-benefit-fund-ltd
https://moonchronicles.tumblr.com/…/h-raja-and-the-lotus-be…
இதில் ஆனந்த விகடன் லிங்க் உள்ளது.
அதிகாரம் வந்த பிறகு தம்பதியர்களின் பேட்டி அழிக்கப்பட்ட யூ டியூப் லிங்க் இதில் உள்ளது.
தாமரை என்ற பா.ஜ.க கட்சி சார்ந்த பெயர்களை வைத்து தொழில் மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார் ஹெச். ராஜா என்று செக்காலைத் தெரு மக்களின் குற்றச்சாட்டை இன்றும் இன்றும் பலமாக ஒலிக்கிறது.
2013 ஆண்டில் சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் சிப்காட் எஸ்டேட் ராமன் அவர்கள் தன்னை நம்பி விற்பனை செய்ய H.ராஜாவிடம் நிலங்களை கொடுக்கிறார். அந்த இடத்தில் அட்வான்ஸ் வாங்கியதை கூட ராமனிடம் சொல்லாமல் அதை ரொட்டேஷன் மோசடி செய்து பெரிய பஞ்சாயத்து ஆகி அது கோர்ட் வரை போய் கட்டாய பஞ்சாயத்து முடிவாகி கேவலம் ஆனதை இல்லை என்று ஹெச்.ராஜாவால் மறுக்க இயலுமா?.
கோயம்புத்தூரில் 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் HOLISTIC HEALTH CARE FOUNDATION LLP நிறுவனம்.
என்ற கம்பெனியில் ஹெச்.ராஜாவின் மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா இயக்குநர் ஆகும் அளவுக்கு உயர்ந்தது எப்படி ?. ஹெச். ராஜா இதை இல்லை என்று மறுப்பாரா ?. மறுக்கதான் முடியுமா?.
இதோ ஆதாரம்.
https://www.zaubacorp.com/…/HOLISTIC-HEALTH-CARE-F…/AAD-1846
இந்த “ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் “ என்ற நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான கோபால் ரத்தினம் குப்தா மோகன் பிரசாத் என்பவர் பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு டைரக்டர்.
காரைக்குடியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரியநாராயணன் ராமதாஸ் உடன் ஒரு தனியார் வங்கியின் இயக்குனரே பங்குதாரராக இணையும் அதிசய பார்முலாவை பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்திய மக்களுக்கு விளக்குவாரா ?.
மதுரை,பெரம்பலூர், சென்னை, கோயம்புத்தூர், கொச்சி ஆகிய நகரங்களில் பினாமி உறவுகள் பெயரிலும் சொத்துகள் வாங்கியது எப்படி என்று ஹெச். ராஜா விளக்குவாரா ?.
தாமரை இன்ஃபோ மீடியா பிரைவேட் லிமிடெட் - இது ஒரு டிவி கம்பெனி.
H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன் ராமதாஸ் சென்னையில் ஹெச்.ராஜா குடியிருக்கும் வட பழனி வீட்டு விலாசத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்த நிறுவனம் “தாமரை இன்போ மீடியா பிரைவேட் லிட்”.
மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா ஒரு டைரக்டர்.
ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி மற்றொரு டைரக்டர்.
மாமனார் தேசியச் செயலாளர் H.ராஜா அதிகாரப்பூர்வமான ஆலோசகர்.
ஒரு ஷேர் விலை 20 லட்சம்.
200 பேரிடம் ரூ 20 லட்சம் வீதம் ஷேர் வசூல்.
40 கோடி மொத்தம் வசூல் செய்ய வேண்டும்.
தந்தி டிவிக்கு தினத்தந்தி விளம்பரம் போகாவிடில் அதுவே இழுபறி நிலமையாக உள்ளது.
பெரிய லாபமும் இல்லை.
மற்ற டிவி முதலீடு கதை ஒரு பக்கம்.
இவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தால் ஒரு கம்பெனி வருமானத்தை இன்னொன்றில் போட்டு இன்னொன்றில் பெரிதாக எடுப்பார்கள்!!.
இப்படி உள்ள நிலையில் மாமா ஹெச்.ராஜா தனது ஆர்எஸ்எஸ் மருமகன் சூர்யா நாராயணன் காரைக்குடியில் 8x6 அளவுள்ள கடையில் ஒரு ஜெராக்ஸ் மற்றும் இரண்டு கம்ப்யூட்டரை வைத்து உழைத்துதான் இவைகளை ஈட்டினார் என்று உறுதி சொல்வாரா?.
லோட்டஸ் பெனிபிட் பண்ட் போலவேதான் தாமரை டிவி முடிவும் வரும்.
அன்று மைத்துனர் ராமச்சந்திரன்.
இன்று மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன்.
வித்தியாசம் அவ்வளவுதான்.
சரி.காரைக்குடியில் கட்சியை வளர்க்க தனது கைத்தடிகளாக இருந்தவர் முழுவதும் தனது உறவினர்.
அப்புறம் லோட்டஸ் பெனிபிட்டில் ஒரு மைத்துனர்.
அப்பறம் தாமரை டிவியில் ஆர்எஸ்எஸ் மருமகன்.
திமுக வை குடும்ப சொத்து என்று பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?!.
உங்கள் தொழில்களை வளர்க்கும் ஆர்வத்திற்கு தொண்டர்கள் மோசடி மன்னன் ப.சிதம்பரத்திடம் தோற்று அவமானப் படணுமா?!.
அடுத்து H.R.மூவ்மென்ட் என்று கோவில்களை காப்பதாக சொல்லி மாயமாக புறப்பட்டீர்கள்!!
ஒரு பிராமணனாக இருந்து வழி காட்ட வேண்டிய நீங்கள் மேல் மருவத்தூர் சரக்கு சாமிக்கு சால்வை போட்டு காலில் விழுகிறீர்கள்.
H.R. மூவ்மென்டுக்கு ரதம் வேண்டும் என செக்ஸ் நித்யானந்தாவின் காலைப் பிடிக்கிறீர்கள். அதற்கு அறுபடை வீடு ரதம்,வேல் ரதம் என்று சாகசம் காட்டினீர்கள்.
மற்ற தெய்வம் போல் இல்லை நம் முருகர். இந்த ஆண்டு நீங்கள் 1000 நித்யானந்தாக்களை வைத்து இருந்தாலும் முருகர் பெயரை சொல்லி இவைகளை மீண்டும் நடத்த முடிந்ததா??. முருகரை வெற்று பப்ளிசிடிக்கு உபயோகிப்பவர்கள் வேலுக்கும்,மயிலுக்கும் பதில் கூறவே இயலாது.
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். அங்கு உங்கள் குரு மாஸ்டர் துக்ளக் பனியன்களை அணிய வைத்து கூர்காக்களை வைத்து வேவு பார்க்கிறார்.
ஒவ்வொரு கோவில் பட்டியலையும் சிலைகள்,நிலங்கள் உட்பட அத்தனை விவரங்களையும் சேகரித்து பெங்களூர் வேணு சீனிவாசன் தங்கைக்கு அனுப்புகிறீர்கள். அந்த கோவில் சொத்துகள் கொள்ளை அழிக்கப்படும்.
இதுவே உங்கள் H.R.மூவ்மென்ட்.
நல்ல விஷயமான அறநிலையத் துறையை விட்டு வெளியேறு என கத்தணும். அதை பிடுங்கி டிவிஎஸ் கையில் ஒப்படைக்கணும்.
இதற்கும், உங்க தொழிலுக்கும் சேர்த்து உங்க கூட K.T. ராகவனையும் அழைத்துச் செல்கிறீர்கள். T.R.ரமேஷும் வருகிறார்.
இதற்கு முதலீடு பெங்களூர் சிலை திருடர்கள்தானே.
HR Movement சாக்கிய பௌத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு புற வாசல் பரிவார்.
பாஸ்...போதும் உங்கள் நாடகம்.
அன்று இல.கணேசன் காலத்தில்
உங்களிடம் ஒரு தொண்டன் வந்து H.ராஜாவிடம் இல.கணேசன் பற்றி சொல்வார். உடனே இல.கணேசனிடம் சொல்லி கொடுத்து விடுவார்கள். இப்போது பொன்.ராதாகிருஷ்ணனை பற்றி H.ராஜாவிடம் புகார் சொன்னால் பொன்.ராதாகிருஷ்ணனிடமே போட்டு கொடுத்து காலி செய்து விடுகிறீர்கள். பொன்.ராதாவிடம் H.ராஜா ஏரியா புகார்கள் வருவதை அவர் இவரிடம் காட்டி கொடுப்பார். எல்லோரும் ஆளாளுக்கு பாஜக தொண்டனை பஞ்சர் செய்து ஓட ஓட விரட்டினால் அவர்கள் எங்கேபா போவார்கள்?.
என்றைக்காவது ஒரு நாள் உங்க சக செத்துப் போன ஆடிட்டர் ரமேஷ் வழக்கை பார்த்தீர்களா?. ஒரு நாளாவது அந்த வீட்டை எட்டி பார்த்தீர்களா?.
மாட்டீர்கள்.
எல்லாம் சுய நலம் .
மருமகனுக்கும்,மாமனாருக்கும் பைசா வண்டி உருளணும். அவ்வளவுதான்.
ஆனால் தொண்டர்கள் உங்களுக்கு பாரத் மாதா கீ ஜெய் போட்டு விட்டு உங்க பின்னாடியே ஓடி வரணும்.
குரும்பூரில் மோகன் சி லாசரஸ் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பை பெற்றுக் கொண்டு அங்கு உள்ள ஆனந்த விநாயகரை இடிக்க துணிந்தனர். அங்கு நண்பர்கள் இதை தடுக்க பலவாறு போராடினார்கள். சென்னை வரை போய் இந்த இந்து தர்மப் போராளியை சிந்த்திக்க துணிந்தனர். எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று போட்டோ எல்லாம் பிடிச்சாச்சு. கோவிலை உடைக்க JCB வரப் போகிறது என தகவல் வந்த உடன் இந்த இந்து தர்ம போராளியை எல்லோரும் தொடர்பு கொண்டனர். போனை எடுக்கவே இல்லை. உடனே நான் தொடர்பு கொண்டேன். விட்டிருவோமா...நான் உடன் ஸ்பாட் போகிறேன்...அல்லது ஆவன செய்கிறேன் என்று உதார் விட்டார்.வரவும் இல்லை. பிறகு என் போனையும் எடுப்பதில்லை. என் போனை எடுக்க வேண்டாம். ஆனால் ஆனந்த விநாயகர் கோவிலை லாசரஸ் இடிக்க வரும் போது இந்த தர்ம போராளி ஓடுவார். அப்புறம் ஏ...லாசரஸ் என்று கூப்பாடும் போடுவார். ஆனால் ரயில்வே கமிட்டியில் இருந்தாலும் ஆனந்த விநாயகருக்கே எதுவும் செய்ய மாட்டார்.
ஆனால் இவரை இந்து தர்ம போராளின்னு ஊரே சொல்லணும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1041046586053966&id=100004459025108
ஆனால் ஸ்கூல் அட்மிஷன்,காலேஜ் அட்மிஷன், வங்கி பிரச்சனைன்னு சொல்லுங்க...அதற்கு கட்சி நிர்வாகிகளை புரோக்கர் ஆக்கி வச்சு சம்பாதிக்க ஓடோடி வருகிறார். 5 லட்சம் வாங்கு. 2 லட்சம் உனக்கு...3 லட்சம் எனக்கு...இதுதான் இந்து தர்ம போராளி டீலிங். இந்த புரோக்கர் வேலை டீலிங் பூரா வசூல் ராஜா மருமகன் சூர்யாதான். இத்தனை கம்பெனிகளுக்கு டைரக்டர் ஆன பிறகும் எச்சில் மிட்டாய் பரோக்கர் வியாபாரம் நின்றபாடு இல்லை. தொண்டர் எவருக்கும் கமிஷன் தவிர எதுவும் செய்த வரலாறும் இல்லை.
இதே சூர்யா அவர்கள் என்னிடம் மாமா வீட்டை உடைத்து யாரோ வந்தார்கள். மனசு சரி இல்லை,ஏதாவது திருச்செந்தூரில் பூஜை செய்ய வேண்டும் என்றார். அடுத்த ஒரு சில நாளில் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வர வைத்து கந்த புராண மந்திரத்தை வைத்து சிறந்த பூஜை நடத்தினோம். தேசிய செயலாளர் ஆனார். ஆனால் ஆனந்த விநாயகரை காக்க வர மாட்டார். ஆனால் H.R.மூவ்மென்டில் ஆலய பாதுகாப்பு என்று கதறுவார்.
இந்துத்துவா,இந்து ராஷ்ட்ரம், இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என வீர வசனத்திற்கு மட்டும் சற்றும் பஞ்சமே இருக்காது. இந்து இந்து என கதறிக் கொண்டு கோர்ட்டில் H.ராஜா மன்னிப்பு கேட்க மட்டும் ரபு மனோகர் என்ற கிறிஸ்தவ வக்கீல் இவருக்கு ஆஜர் ஆவராம்.
கார்த்திக் சிதம்பரம் கூட மோதியதை போல ஒரு லட்டு வேட்பாளர் இவருக்கு இனியும் கிடைக்குமா?!. தேர்தலில் தோற்றால் எல்லோருக்கும் பண லட்சுமி குறையும். இவருக்கு ப.சிதம்பரம் மகனை எதிர்தாலும் லட்சுமி கூடிக் கொண்டே இருக்கிறாளே எப்படி மாமா மருமகனே?!.
எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜா, எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜாவோட அப்பா, எளிமையான H.ராஜாவோட மருமகன் சூர்யா என்றுதானே பழகினோம்!. சாக்கிய பௌத்த யூத டெக்னிக் இப்படிதான் என்று மேலும் தெரிந்து கொண்டேன். வசூல் சிஷயர்களை தவிர கோஷம் போடும் தொண்டர்களுக்கு இங்கு மதிப்பே கிடையாது.
முருகா...வெறி ஊட்டப்பட்டு ஏன் செத்தோம் என்று தெரியாத 400 பேருக்கு மேற்பட்ட ஆன்மாவையும் சாந்தி அடைய வைத்து எஞ்சிய குடும்பத்தினரையும் காப்பாயாக.
மொத்தத்தில் ஒரு எளிமையாளன் என்று பழகியதில் இத்தனை நாசகார முகமூடியா?!..
எங்கு நோக்கினும் சகதி யடா!!.
Zylog வழக்கை விடாதே,
வானதியை விடாதே என்று என்னை உசுப்பி விட்டு வானதியோடு அடங்கிப் போவது.
பொன்.ராதாகிருஷ்ணனை விடாதே புடி என்பது.
பின் அவருடன் அடங்கிப் போவது.
இதுதான் தேசியத்தை காக்க புறப்பட்டு வந்த வசூல் ராஜா.
நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.
வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக