ஞாயிறு, 23 ஜூன், 2019

சென்னை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடங்கியது

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடங்கியதுதினத்தந்தி : சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.
இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் வழங்குகின்றனர்.
தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிந்தபின் இரவு 8 மணிக்கு மேல் பள்ளியை காலி செய்து விட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 பள்ளிக்கு வெளியில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. பள்ளி வளாகத்துக்குள்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இதனை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலானது சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக