வெள்ளி, 28 ஜூன், 2019

தங்க தமிழ்செல்வன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

தினமலர் : சென்னை: அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தங்க தமிழ்செல்வன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். பேட்டி அளித்தபோது, ஸ்டாலினை தளபதி, தளபதி என்று சொல்லி புல்லரிக்க வைத்தார் மோதல் லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தினகரனை கடுமையாக விமர்சித்து, தங்கதமிழ்செல்வன் பேசிய, 'வீடியோ' வெளியானது. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக, தினகரன் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க., வில் சேருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை சேர்க்க, அ.தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர், அவரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இணைந்தார்< இதையடுத்து, தங்க தமிழ்செல்வன், இன்று(ஜூன் 28) திமுக தலைமை அலுவலகத்தில், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இதற்கு முன்னர், அமமுகவில் இருந்து விலகி, வி.பி.கலைராஜன், செந்தில்பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர், ஸ்டாலின் மட்டும் தான். அவரால் மட்டுமே , நல்ல நிர்வாகம், கொடுத்து திட்டங்களை கொண்டு வர முடியும். இதனால் திமுகவில் இணைந்துள்ளேன். அனைவரையும் அனுசரித்து செல்லும் பக்குவம் ஸ்டாலினுக்கு வந்துள்ளது. இதனை ஆதரிக்க வேண்டும்.

ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும். இதனால்,தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. முட்டல் மோதல் நீடித்து வருகிறது. அதிமுகவை பா.ஜ., பின்னால் இருந்து இயக்கி வருகிறது. தன்மானத்தை விட்டு அதிமுகவில் இணைய விரும்பவில்லை. ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. எனது உழைப்பை பார்த்து திமுகவில் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
ஸ்டாலினுக்கு புகழாரம்:

முன்பெல்லாம் சின்னம்மா, சின்னம்மா என்றும் தினகரன் என்றும் பேசி வந்த தங்கதமிழ்செல்வன், இன்று பேட்டி அளித்தபோது வார்த்தைக்கு வார்த்தை ஸ்டாலினை, தளபதி, தளபதி என்று புகழ்ந்து தள்ளினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக