ஞாயிறு, 23 ஜூன், 2019

பிரியங்கா காங்கிரஸ் தலைவராக வருவதில் சிக்கல்?

தினமலர் :
congress, Rahul, priyanka, rahul gandhi, priyanka gandhi, cong, காங்கிரஸ், பிரியங்கா, ராகுல், தலைவர்கள்,புதுடில்லி: பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக்க மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி, படு தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முன்னதாக பிரியங்கா தீவிர அரசியலில் குதித்தார். கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச் செயலராகவும், அவர் நியமிக்கப்பட்டார். பிரியங்கா, மறைந்த முன்னாள் பிரதமர், இந்திராவின் முகமாக பார்க்கப்பட்டதால், உ.பி.,யில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என, தொண்டர்கள் முதல், தலைவர்கள் வரை, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்திரா குடும்பத்தின் சொந்த தொகுதியான அமேதியிலேயே, ராகுல் பரிதாபமாக தோற்றார்.இந்நிலையில், காங்., கட்சி தலைவராக நீடிக்க, ராகுல் விரும்பவில்லை. எனவே, பிரியங்காவை கட்சி தலைவராக்கலாம் என, சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், இதற்கு பல சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'பிரியங்கா, எந்த ஒரு விஷயத்தையும், உணர்ச்சி பூர்வமாக கையாள்பவர்; அதன்படியே முடிவும் எடுப்பார். 'ஆனால், ராகுல், தொண்டர்கள் சொல்வதை அமைதியாக கேட்பார். பிரியங்கா முக்கிய பொறுப்பில் வருவதை, கட்சி தலைவர்கள் யாரும் விரும்பவில்லை' என்கிறார், காங்.,கின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.'பிரியங்கா, 1997ல் எடுத்த ஒரு முடிவால் தான், அவருடைய குடும்பம் மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியும், திண்டாடிக் கொண்டிருக்கிறது' என, கிண்டலாக சொல்கிறார், அந்த முன்னாள் அமைச்சர். 1997ல் தான், ராபர்ட் வாத்ராவை, பிரியங்கா திருமணம் செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக