வியாழன், 30 மே, 2019

பெரியார் கட்டுரைத்தொகுப்பு கன்னடத்தில்.. பெங்களூர் பேராசிரியர் தமிழவன் ..

சிற்றேடு காலாண்டிதழ் : ஆயிரம் படிகள் முதல்பதிப்புவிற்றுத் தீர்ந்து, மீண்டும் அடுத்தபதிப்பு, சமீபத்தில் வெளிவந்துள்ளது.வழக்கமாய் பெரியார் என்றவுடன் கர்னாடகத்தில் பிராமணர்களைத்திட்டுபவர்
எனக்கொச்சையாய்ப்புரிந்திருந்தனர்.
எனவே பெரியாரின் தத்துவம், அவர் வாழ்நாள்முழுதும்நடத்திய போராட்டங்கள்,புரட்சிபற்றிய சிந்தனை,பொருள்முதல்வாதம் (பிரகிருதிவாதம்)பற்றி அவர் எழுதிய கட்டுரைகள்,காந்தி,ஜின்னா,அம்பேட்கர் போன்றோரோடு பெரியாருக்கு இருந்த தொடர்பு, அவருடைய சோசலிசம் பற்றியகருத்துக்கள் போன்றன இத்தொகுப்பில் வலியுறுத்தும் முறையில் பெங்களூர் பல்கலையில் பேராசிரியராக இருந்த தமிழவன் சுமார் முன்னூற்றி ஐம்பதுபக்க நூலைத்தொகுத்துள்ளார். 
தமிழில் இதுவரை வராத அவருடைய விரிவான முன்னுரையும் நூலில் உள்ளது.சிறந்த கன்னட பேராசிரியர்களின் மேற்பார்வையில் தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதால் நல்ல கன்னடத்தில் நூல் வெளிவந்துள்ளது எனபுகழ்பெற்றுள்ளது. 
இன்று கர்நாடகத்தில் மதவாத சக்திகள் வெற்றிபெற்றுள்ள பின்னணியில் பெரியார் சிந்தனைகள் கர்நாடக அரசின் மொழிபெயர்ப்புநிறுவனம்(குவெம்பு பாஷா பாரதி) ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளது
கவனிக்கத்தக்கது.கௌரிலங்கேஷ்,பேரா.கல்புர்கி போன்றோர் கொலைசெய்யப்பட்ட சூழலில் பெரியார் சிந்தனைகள் இன்று வந்து பாராட்டைப்பெற்றுள்ளது கர்னாடக பகுத்தறிவாளர்களை மகிழவைத்துள்ளது. எடியூரப்பா போன்றோர் முதலமைச்சரானால் இத்தகைய நூல்கள் தப்பிப்பிழைக்குமா என பலர் கேள்விகேட்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக