வியாழன், 30 மே, 2019

கடனுக்காக எப் எம் ரேடியோ கம்பனிகளை விற்கும் அனில் அம்பானி


tamiloneindia.com :சொத்துக்கு சொத்தாக முத்துக்கு முத்தாக என்பது போல தனக்கு சொத்துக்கு சொத்தாக இருந்த எஃப்.எம் ரேடியோ ஒளிப்பரப்பு வர்த்தகத்தை கைவிடப்போகிறாராம் அனில் அம்பானி.
ஆமாங்க ரிலையன்ஸ் பிராட்கேஸ்ட் நெட்வொர்க் Reliance Broadcast network (RBN) நிறுவனத்தை 1200 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளராம் நம்ம அனில் அம்பானி.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ரேடியோ ஒளிப்பரப்பு நிறுவனத்தினை இரண்டு பகுதிகளாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளாராம். ஆமா அப்பு, ஏற்கனவே 39 ரேடியோ ஒலி ஓளிப்பரப்புகளில் கலக்கி வரும் ஜக்ரன் பிரகாசம் குழுமம் தான், அனில் அம்பானியில் ஆர்.பி.என் குழுமத்தில் உள்ள எஃப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களை வாங்க போகிறார்களாம்.
இதன் மூலம் இன்னும் கலக்கலான்னு நினைகிறாங்க போல சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ் அதுமட்டும் இல்ல அப்பு, ரேடியோ, பிரிண்ட், டிஜிட்டல் உள்ளிட்ட இன்னும் பல சேவைகளை செய்து வரும் ஜக்ரன் இந்த ரேடியோ ஸ்டேஷன்களை வாங்குவதன் மூலம் ரேடியோ துறையில் முன்னணியில் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


அதோடு ரிலையன்ஸ் பிராட்கேஸ்டின் மூலம் 40 ரேடியோ ஸ்டேஷன்களை வாங்குவதன் மூலம் இன்னும் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக 40 ரேடியோ ஸ்டேஷன்களை ரூ.1050 கோடிக்கு வாங்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அனில் அம்பானியின் மீதமிருக்கும் 18 ரேடியோ ஸ்டேஷன்களை மற்றொரு நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்க போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இதற்கு காராணம் சுபாஸ் சந்திர தலைமையிலான ஜீ குழுமத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது தானாம்.

இதன் மூலம் தனக்கிருக்கும் கடனில் கொஞ்சமாவது கட்ட முடியும் என்றும், அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி அடையலாம் என்றும் கருதுகிறாம் அனில் அம்பானி. இதற்கிடையில் தனக்கிருக்கிம் கடன் களில் 50 – 60 சதவிகிதத்தை எப்படியாவது குறைத்து விட என்றும் பல திட்டங்களையும் தீட்டி வருகிறாம். இந்த நிலையில் அடுத்து அவரது கண்ணுக்கு ரிலையன்ஸ் நிப்பான் லைப் தானாம். அது மட்டும் இல்லையாம் இன்னும் லிஸ்ட் இருக்காம் அப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக