ஞாயிறு, 5 மே, 2019

பிரியங்கா காந்தி : என் தந்தையின் தியாகத்தை அவமதித்த மோடிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

மாலைமலர் :ராஜீவ் காந்தி ஊழல்வாதியாக இறந்தார் என்று என் தந்தையின்
தியாகத்தை அவமதித்த பிரதமர் மோடிக்கு அமேதி மக்கள் இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார். உங்கள் (ராகுல் காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி இவ்வாறு பேசினார இறந்துப்போன ஒரு தலைவரை பற்றி இவ்வாறு பேசிய பிரதமர் மோடியின் கருத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி ஊழல்வாதியாக இறந்தார் என்று என் தந்தையின் தியாகத்தை அவமதித்த பிரதமர் மோடிக்கு அமேதி மக்கள் இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயரால் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்யும் பிரதமர் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் பேரில் நேர்மையான ஒரு நிரபராதி மனிதரை தனது பேச்சின் மூலம் அவமதித்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி தனது உயிரை கொடுத்து பாடுபட்ட அமேதி தொகுதி மக்கள் அவரது குற்றச்சாட்டுக்கு இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள். ஆமாம் மோடி அவர்களே இந்த நாடு மோசடிக்காரர்களை ஒருபோதும் மன்னிக்காது’ என தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக