ஞாயிறு, 5 மே, 2019

இலங்கையில் 200 அரபு போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் திருப்பி அனுப்பட்டனர் மேலும் 800 ..?

200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் இலங்கையில் இருந்து வெளியேற்றம்மாலைமலர் :விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200  அரபு போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொழும்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களையடுத்து  ஜாகீர் நாயக்கின் ‘பீஸ் டி.வி.’ ஒளிபரப்பை இலங்கையில் உள்ள இரு பிரதான கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், சுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் நுழைந்து இங்குள்ள இஸ்லாமிய மதரசாக்களில் போதகர்களாக இருக்கும் சுமார் 800 வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என பெருநகர மற்றும் மேற்கத்திய மேம்பாட்டுத்துறை மந்திரி பாட்டாலி சம்பிக்க ரனவக்க இலங்கை அரசை வலியுறுத்தி இருந்தார்.


இந்நிலையில், விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி வஜிர அபேவர்தென தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மத போதகர்களை இங்கு வரவழைப்பது காலகாலமாக உள்ள வாடிக்கையான செயல்தான். ஆனால், சமீபகாலமாக இந்த போதகர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனினும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு நாடு முழுவதும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்துவந்து விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 பேர் சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர் என வஜிர அபேவர்தென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இஸ்லாமிய போதகர்களுக்கான விசா கட்டுப்பாடு  நடைமுறைகளை சற்று கடினமாக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக