வெள்ளி, 31 மே, 2019

புதிய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் .. மிக மோசமான வரலாறு கொண்டவர்

political advisor to the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka.
ரவிராஜ் : அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்...
தில்லியில் 1955இல் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு பழமைவாத சித்தாந்தவாதி. 1970களில் சோவியத் யூனியனில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றிய அவர் தொடர்ச்சியாக அமெரிக்கா ,செக் குடியரசு, சைனா, சிங்கப்பூர் என பல தேசங்களில் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆன பின்பு அவருக்கு அமெரிக்கா மறுத்த விசாவை மீண்டும் கிடைக்கச் செய்தது இந்த ஜெய்சங்கர் தான்.
அமெரிக்காவின் ஹைடு சட்டத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை மீறிய அனு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அதிகாரி இவர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது இவரது தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இவரது பல்வேறு அணுகுமுறைகள் மனித மாண்புகளை மீறிய செயலாகவே இருந்துள்ளது. உதாரணத்திற்கு 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து நேபாளத்திற்கு தேவையான பெட்ரோல், மருந்துகள் உள்ளிட்ட அத்துணை அடிப்படையான பொருள்களையும் நேபாளம் செல்ல விடாமல் தடுத்ததுடன் அந்த நாட்டின் கம்யூனிச அரசாங்கம் கட்டமைத்த அரசியலமைப்பு சாசனத்தில் தனக்குத் தேவையான திருத்தங்களை செய்தாலொழிய உங்களுக்கான எந்த ஒரு உதவியும் கிடைக்காது என மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொண்டவர். நேபாளத்திற்கு குவிந்த அத்துணை நிவாரண பொருட்களையும் கல்கத்தாவில் தேக்கி வைத்துக் கொண்டு தொடர்ச்சியான நிர்பந்தத்தை நேபாளத்தில் உருவாக்கியவர்.

இந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி அவர்களின் முழு ஒப்புதலுடன் இந்த நிர்பந்தம் அந்த தேசத்தினுடைய சுதந்திரத்தின் மீது வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. எல்லை அடிப்படையில் இந்திய அரசை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள நேபாளம் வேறுவழியின்றி தனது அரசியலமைப்பு சாசனத்தில் இந்தியா நிர்ப்பந்தித்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டது. அதற்க்காக அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்து சாசனத்தில் திருத்தம் உருவான பின்பே நேபாளத்திற்குள் உலக நாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருள்கள் நுழைந்தது.
இத்தகைய மனிதத் தன்மையற்ற ஒரு மனிதர் இந்தியாவினுடைய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் அவமானங்களில் ஒன்று.
இந்தியாவில் அற்புதமான வெளியுறவுக் கொள்கை ஆன அணிசேராக் கொள்கை க்கு எதிரான ஒரு மனிதர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக