செவ்வாய், 7 மே, 2019

பாஜக தரப்பில் உற்சாகம் .. ஒப்புகை சீட்டுக்களில் 50 வீதம் ..முடியாது .. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டு இயந்திர மோசடிக்கு ஆதரவு ? .. சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidunakkheeran.in - elaiyaselvan : எலெக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லு செய்ய பாஜக தலைவர்கள் திட்டமிடுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.
அதில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையையும், வாக்குறுதி ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையில் உள்ள விபரங்களையும் 50 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், பாஜக தரப்பில் உற்சாகம் கொப்பளிக்கிறது. அவர்களிடம் நமட்டுச் சிரிப்பு அதிகரித்தபடி இருக்கிறது அதேசமயம்,  எதிர்க்கட்சிகளிடம் ஒருவித பதட்டம் பரவியிருக்கிறது. ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லுகள் நடந்து விடுமோ? என்கிற பயம் கலந்த பதட்டம் அது. இந்த நிலையில், தில்லுமுல்லுகளை தடுப்பது குறித்தும், ஓட்டிங் மெஷினை பாதுகாப்பது குறித்தும் எதிர்க்கட்சிகளின் தலைமையிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக