திங்கள், 1 ஏப்ரல், 2019

வேலுமணி CP ராதா கிருஷ்ணனுக்கு எடுத்து வச்ச பணம்.... திமுக தேர்தலை பிரசாரத்தை குழப்ப எடுத்த முயற்சி

வேலுமணி CP ராதா கிருஷ்ணனுக்கு எடுத்து வச்ச பணம்.
IT dept துரைமுருகன் கோடவுனில் கண்டு எடுத்தாக கூறப்பட பணம் என்று தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அல்லது கசியவிடப்பட்ட அந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் வேலுமணியால் பாஜகவின் கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷனுக்கு தேர்தல் பட்டுவாடாவுக்கு கொடுக்கப்பட்ட பணம் என்று மிக தெளிவாக தெரிந்துள்ளது . 201., PN பாளையம் ரோட்.புத்தூர் .கோயம்புத்தூர் .தமிழ்நாடு 641045 என்று மிக துல்லியமான விலாசத்துடன் கூடிய கேமராவில் பதிவாகி உள்ளது .இது இன்று சமுகவலையில் அதிரடி ட்ரெண்டிங் ...
உதாரணத்திற்கு :  Riyas Deen வருமான வரித் துறைக்கு ஒரு கேள்வி...நீங்கள் யார் வீட்டில் வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. அது உங்கள் பணி. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அது துரைமுருகனாக இருந்தாலும் ஸ்டாலினாக இருந்தாலும் சரி.. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இன்றைக்கு காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறதே ஒரு வீடியோ.. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாகவும் அதில் பண மூட்டைகளில் வார்டுகளின் எண் எழுதப்பட்டிருந்ததாகவும் அந்தப் பணம் முழுவதும் துரைமுருகன், அவரது மகனுக்கு சொந்தமானது என்றும், தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்ததாகவும் செய்திப் பின்னணியோடு அந்த வீடியோ உள்ளது. இதன் காரணமாக வேலூர் தேர்தலே ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எதுவாகினும்
நடக்கட்டும்..

ஆனால், என்னுடைய கேள்விஎன்னவென்றால்..

ஏற்கெனவே ஒருமுறை அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதே, ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதே.. இதற்கெல்லாம்கூட கட்டுக்கட்டாக பணம் சிக்கியதுதான் காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அப்போது எந்த வீடியோவையும் வருமான வரித்துறையோ தேர்தல் பறக்கும் படையோ வெளியிடவில்லை.
2016 தேர்தலின்போது கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் 500 கோடிக்குமேல் சிக்கியதாக கூறப்பட்டதே..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியதாக செய்திகள் வந்தனவே..
அப்போதெல்லாம் இதுபோன்ற வீடியோக்களை வருமான வரித்துறை வெளியிட்டதா? எவ்வளவு பணம் சிக்கியது என்ற விவரத்தையாவது வெளியிட்டதா?

அதுமட்டுமல்ல.. சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான இடங்களில் சோதனை நடந்ததே...
ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் சோதனை நடந்ததே..
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, குவாரிகளில் சோதனை நடந்ததே..
முட்டை வியாபாரி கிறிஸ்டி வீட்டில் சோதனை நடந்ததே..
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடந்ததே..

இந்த சோதனைகளில் எல்லாம் சிக்கியது எவ்வளவு பணம்.. எவ்வளவு ஆவணங்கள். அதில் கணக்கில் காட்டாதது எவ்வளவு என்ற விவரங்களை எல்லாம் வருமான வரித்துறை வெளிப்படையாக அறிவித்ததா?

துரைமுருகன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதே நேரத்தில் தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும் வேறு எந்த வேட்பாளரும் பணம் பதுக்கி வைக்கவில்லை.. கோடிகளில் பணத்தை தண்ணீராக இறைக்கவில்லை என்று வருமான வரித்துறையினர் தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்ல முடியுமா? குறிப்பாக ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் பண வெள்ளம் பாயவில்லை என கூற முடியுமா? இதே வேலூரில் ஏ.சி.சண்முகம் வீட்டில் ரெய்டு நடக்குமா?

இதற்கெல்லாம் பதில் கிடைத்தால் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் இல்லை.. பாரபட்சம் இல்லை என்பதை தமிழக மக்களும் ஒப்புக் கொள்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக