திங்கள், 1 ஏப்ரல், 2019

எதிரிகள் பதட்டத்தில் செய்யும் தவறை தடுக்காதே ..ஜென் பழமொழி.. வீடியோவை லீக் பண்ணியது ...?

Devi Somasundaram : ரெண்டுல ஒன்னு ஒத்து போனா ப்ருப் இல்ல ....அது வெறும் ஒத்தையடி தெருனு ரா புவன் நிருபப்பிச்சு இருக்கார் ..
மொதல்ல இந்த வீடியோ யார் விட்டது .. வருமான் வரி துறை இப்டி தன் கஸ்டடி வெளில் விட அவசியமில்ல .. அப்டின்னா யார் விட்டது?
 ஒரு சானல்ல அஸ்கர் அலி வீட்ல .
ஒரு சானல்ல சினிவாசன் வீட்ல .
ஒரு சானல்ல துரை முருகன் வீட்ல .
ஒரு சானல்ல கிங்க்ஸ்டன் காலேஜ்ல ...
 ஒரு சானல்ல துரை நண்பர் வீட்ல . ஒரு சானல்ல ஆதரவாளர் வீட்ல .. ஏன் இத்தனை பொய் . ஏன் வீடியோ ரகஸியமா இருக்கு .. சவுக்கு சங்கர் போட்ட போட்டோல இருக்கற மஞ்ச பை,  நீல பை ஒப்பந்தகாரர் வீடியோலயும் எப்டி வந்துச்சு .. அணைக்கரைனா எந்த அணைக்கரை . க்ளியர் த டவுட்ஸ் .
ஆலஞ்சியார் : எதிரிகள் பதற்றத்தில் செய்யும் தவறை தடுக்காதே ..ஜென் பழமொழி
அவர்களுக்கே வினையாகிறது . திமுகவின் செயல்பாடுகளை கண்டு வெற்றிபெறுவது உறுதியான பிறகு பதறுகிறார்கள்
திமுகவை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஏதேதோ காரணத்தை சொல்லி அழித்துவிடலாமென்று கங்கணம் கட்டியவர்கள்..அமைப்புகள் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போனது/செல்லரிக்க தொடங்கியது .. ஊழல் என சொன்னார்கள் ரௌடிகளின் கட்சி என்றார்கள் பேசியே ஏமாற்றுகிறார்களென்றார்கள் குடும்பகட்சி என்று சொல்லிபார்த்தும் மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் கூடுவதை கண்டு அஞ்சி வேறெங்கோ எடுத்த வீடியோவை போட்டு திசை திருப்ப கடைசியில் ஊர் பெயர்வரை கண்டுபிடித்து திருப்பி அடிக்க தொடங்கியவுடன் மௌனிக்கிறார்கள் ..

..
ஸ்டாலின் இந்து மதத்தை விமர்சிக்கிறார் என்றார்கள் மிக தெளிவாக நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல இந்துத்துவா பாசிசத்தை தான் எதிர்க்கிறேன் .. என் மனைவி கூட தினம் கோவிலுக்கு செல்பவர்தான் நான்அவரை தடுப்பதில்லை என தெளிவாக சொல்லியிருக்கிறார் ..
முன்பு இப்படிதான் கலைஞர் ராமானுஜம் தொடரை எழுதியபோது கலைஞரின் பகுத்தறிவு என்னானது என்று விஷமத்தனம் செய்தார்கள் ..
ராமானுஜரை அறிந்ததினால் எங்கே உண்மை வெகுமக்களை சென்றடைந்து விடுமோ வேதமென்ற பெயரில் பார்பனர் இட்டுகட்டிதெல்லாம் அவிழ்ந்துவிடுமோ என பதறினார்கள்
ஆதிசங்கரரின் #அத்வைதம் கோட்பாட்டிற்கு மாற்றுச்சொன்னவர் ராமானுஜர்..
"எவன் அறிவிற்குள் உறைபவனோ..அறிவிற்கறிவாக இருப்பவனோ..#அவன் தான் #இவ்வான்மாவை அழியாமல் உள்ளுறைப்பவன்.. என்றார்
இது ஆதிசங்கரின் அத்வைதம் கோட்பாட்டிற்கு எதிரானது..
அதுமட்டுமல்ல
தமிழின் பாசுரங்களை சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் பாடிவந்தனர்..
அதன் ஒலிஅளவில் பிழை வருவதால் அதன் பொருள் மாறுபடுகிறது என்று தமிழேயே மூலமந்திரத்தை பாடச் சொன்னவர் ராமானுஜர் ....
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திருகச்சியை தன் குருவாக ஏற்றுக்கொண்டவர்
தாழ்த்தப்பட்டவரான..உறங்காவில்லிதாசரை சீடராக ஏற்றுக்கொண்டார் ..
அதுமட்டுமா
திருகோஷ்யூர் நம்பியிடத்தில்..
நடையாய் நடந்து..கற்றுக்கொண்ட..
திருமந்திரத்தை...கோபுரம்மீதேறி உலகுக்கு உரக்க சொன்னார்....
குரு நம்பி யாரிடம் சொல்ல கூடாது என்றுச்சொன்னேனே என்ற போது..
இதை நிறைய பேர் அறிந்தோதி..
வைகுண்டம் செல்வார்களேயானால் நான் நரகம் செல்ல தயார் என்றவர் ராமானுஜம்
அதனால் தான் பார்பனர்கள் பதறினார்கள் ..
..
திமுகவின் செயல்பாடுகள் அது இலக்கிய வடிவிலாக இருந்தாலும் சரி அரசியல் சமூகம் மண் கலை கலாச்சாரம் பண்பாடு சார்ந்திருந்தாலும் நம் எதிரிகள் பதறுவார்கள் ..
அவர்கள் பதறட்டும் ..
நம் வெற்றியை எதிரிகளால் தடுக்க முடியாது

1 கருத்து: