சனி, 6 ஏப்ரல், 2019

காங்கிரஸ் . ஆம் ஆத்மி கூட்டணி .. Congress 3 .. aam aadmi 4..

தினகரன் :டெல்லி: நீண்ட இழுபறிக்கு பின்னர் டெல்லி மாநிலத்தில்
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 3 தொகுதியிலும், ஆம் ஆத்மி 4 தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், ஷீலா தீக்ஷித், பி.சி.சாக்கோவுடனான ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறது.


டெல்லி, மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக உள்ளது. இதில் டெல்லிக்கு மட்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி போதும் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் ஹரியானாவுக்கும் சேர்த்து கூட்டணி என்றால் கூட்டணியை இறுதி செய்துவிடலாம் என ஆம் ஆத்மி திட்டவட்டமாக கூறிவிட்டது. எனவே தற்போது டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி பேச்சின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் இந்த அம்சத்தை சேர்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மியின் முக்கிய நிபந்தனையாக இந்த கோரிக்கை இருப்பதால், இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக