ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

மெட்ரோ ரயிலுக்காக நிலம் கையகப்படுத்த மயிலாப்பூர் வாசிகள் எதிர்ப்பு!

tamil.news18.com :  டிடிகே சாலை, மற்றும் லஸ் சர்ச் சாலைகளில் மெட்ரோ பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.<மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. விமான நிலையம் - வன்னாரப்பேட்டை மற்றும் செயிண்ட் தாமஸ் மவுண்ட் - சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து சீராக நடந்துவருகிறது. தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் இதற்கான மண் பரிசோதனைகள், நிலம் கையகப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது மாதாவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் மயிலாப்பூர், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ள. இந்தப்பகுதிகளில் பூமிக்கு அடியில் ரயில் நிலையம் அமைகிறது.


இந்நிலையில், மயிலாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அப்பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வழித்தடத்தில் ஏற்கனவே உள்ள பறக்கும் ரயில் பாதையை மெட்ரோ நிர்வாகம் மேம்படுத்தி பயன்பாட்டுக்கு விடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

டிடிகே சாலை, மற்றும் லஸ் சர்ச் சாலைகளில் மெட்ரோ பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்


krishnavel : மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் அமைக்க நிலம் தரமுடியாது என்று மயிலாப்பூரில் குடியிருக்கும் மக்கள் 50 பேர் சென்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் அபகரிக்கப்பட்டபோது அதை எதிர்த்து அடிவாங்கிய மக்களை, விவசாயிகளை எல்லாம் இதே வாய்கள்தான் “தேசநலனை எதிர்க்கும் தேசத்துரோகிகள்” என்று பேசியது.மேலும் நக்ஸல்கள் என்றெல்லாம் அவதூறும் பரப்பியது.
இப்போது நாம் அனைவரும் சொல்வோம்,நம் சென்னை நகரவாழ் மக்கள் நலனை எதிர்க்கும் இவர்களும் தேசவிரோதிகளே.மயிலாப்பூர் தேசவிரோதிகளே,மக்கள் நலன் காக்கவேண்டும், இடத்தை விட்டுவிட்டு ஓடிப்போங்கள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக