ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

சீமான் புலிகளை ஆதரிக்கலாம்! கைது செய்யப்படமாட்டார்! வேறு யார் பேசினாலும் உடனடியாக கைதுசெய்யப்படுவர்! ஏன் ஏன் ஏன் ?

சுப்பிரமணியம் சிவா : சீமான் தம்பிகளிடம் ஒரு கேள்வி! விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு அவ்வமைப்பையோ அல்லது அவ் அமைப்பின் தலைவர் பிரபாகரனையோ ஆதரித்துப்பேசுவது சட்டப்படி குற்றமாகும். கடந்த ஆண்டு இதே மாதம் இவ்வாறான ஒரு வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்டு வை.கோ 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் பின் ஜாமீனில் வெளியே வந்தார் இன்றும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
கோவை ராமகிருஸ்ணண் கொளத்தூர் மணி வை.கோ போன்றவர்கள் பலமுறை புலிகளை ஆதரித்துப்பேசியமைக்காக தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தச்சட்டங்கள் 2004 இல் திரும்ப பெறப்பட்டாலும் அதற்கு பதிலாக ஒரு திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது அச்சட்டத்தின் 39 ஆம் பிரிவு இவ்வாறு சொல்கிறது
(Sec. 39 - A Person commits the offence relating to support given to a terrorist organisation,
Sec. 39 (2) - Shall be punishable with imprisonment for a term not exceeding ten years, or with fine, or with both)
இச்சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது இச்சட்டத்தின் பிரகாரம் இந்தியாவால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தாலோ அல்லது இணைந்து செயற்பட்டாலோ 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்...
இப்போது சீமான் ஆதரவாளர்களிடம் ஒரு கேள்வி கடந்த ஆண்டு கூட இச்சட்டத்தின் கீழ் வை.கோ கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் இதுவரை ஒரு தடவை கூட "சீமான்" இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவில்லை இது எப்படி சாத்தியம்? சீமான் பேசாததையா வை.கோ பேசிவிட்டார் என்று சிறையில் அடைத்தார்கள்?
சீமான் பகிரங்கமாக மேடையில் நான் புலிகளிடம் பயிற்சி எடுத்தேன் என்கிறார், என் தலைவன் பிரபாகரன் என்கிறார், புலிகள் அடுத்த கட்ட போராட்டத்தை என்னிடம்தான் விட்டுச்சென்றார் என்கிறார் ஆனால் இதையெல்லாம் இந்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறதே ஏன்? கியூ பிரிவு பொலிசார் வை.கோ வை மட்டும்தான் கைது செய்யுமா சீமானை கைது செய்யாதா?

இந்த இடத்தில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் சீமானைத் தவிர வேறு எவர் புலிகளை ஆதரித்துப்பேசினாலும் செயற்பட்டாலும் உடனடியாக கைதுசெய்யப்படுவர் ஆனால் சீமான் கைதுசெய்யப்படமாட்டார் ஏனெனில் மத்திய உளவுப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் இயங்குபவர் சீமான் அவர் கியூ பிரிவின் தத்துப்பிள்ளை அவரை பயங்கரவாதத்திற்கு எதிரான எந்தச்சட்டமும் எதுவும் செய்யாது.
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சீமான் என்ற இந்திய உளவுத்துறை ஏஜண்டுக்கு பணம் போட்டு வளர்க்கிறீர்கள் இதுவரை புலிகளை ஆதரித்துப்பேசியமைக்காய் ஒரு தடவைகூட சீமான் கைதுசெய்யப்படவில்லையே ஏன் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள். சீமான் உணர்ச்சிகொண்ட இளைஞர்களை ஒரு பட்டிக்குள் சேர்த்து அடைக்க பயன்படுத்தப்படும் மத்திய அரசின் விசுவாசம் மிக்க மேய்ப்பன்.
சீமானுக்குப் பின்னால் திரளும் இளைஞர்களின் புரட்சி ஒருபோதும் விடுதலைக்கு உதவப்போவதில்லை. அதற்கு சின்ன உதாரணம் வேல்முருகனால் மேற்கொள்ளப்பட்ட டோல் கேட் உடைப்பு போராட்டம் அப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சுங்கச்சாவடிகளை அடித்து நொருக்கி வீசினார்கள் மேடையில் வீரம் பேசும் சீமான் கட்சியினரோ சீமானின் உத்தரவுப்படி அடையாள மறியல் செய்து அமைதியாய் களைந்து போயினர் உண்மையில் ஒவ்வொறு சுங்கச்சாவடியையும் அடித்து நொருக்கியிருக்கவேண்டியவர்கள் அவர்கள்தான் ஆனால் அதைச்செய்யவில்லை அல்லது செய்யவிடப்படவில்லை இங்குதான் சீமான் மத்திய அரசின் கைகூலியாக அந்த இளைஞர்களின் கைகளை கட்டிப்போட்டார். இதுதான் இனி எல்லாவற்றிலும் தொடரும்..
புலிகள் அமைப்பில் இணைந்து பயிற்சிபெற்று ஈழத்தில் பலவருடங்கள் இருந்து புலிகள் அமைப்பின் நேரடி உறுப்பினராக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னோடியும் தீவிர தமிழ்தேசிய செயற்பாட்டாளருமான சுப.முத்துக்குமாரை உள்ளிருந்தே கொலை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை.
சிந்தியுங்கள் செயற்படுங்கள் நன்றி வணக்கம்!
சு.பிரபா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக