வெள்ளி, 5 ஏப்ரல், 2019

அன்புமணி வெற்றி நிச்சயம்.. தில்லுமுல்லு செய்து ஜெயிப்போம் .. தேர்தல் ஆணையம் உடந்தை... ஒப்புதல் வாக்குமூலம் .. வீடியோ


LR Jagadheesan : படித்தது மருத்துவம்; வகித்தது இந்திய அரசின் சுகாதார அமைச்சர் பதவி; ஐநா முதல் அமெரிக்காவரை பயணித்தவர். இறுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றும்படி பொது மேடையில் தன் கட்சிக்காரர்களை கூச்சமே இல்லாமல் தூண்டிவிடுகிறார்.
கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக அரசியலின் ஒட்டுமொத்த அதளபாதாள வீழ்ச்சிக்கும் விபரீத எதிர் பரிணாம வளர்ச்சிக்கும் அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சு இன்னும் ஒரு உதாரணம்.
அன்புமணி இந்த பேச்சில் சொல்வது வெறும் அரசியல் கட்சிகள் செய்யக்கூடிய வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் ரௌடித்தனமும் அராஜகமும் மட்டுமல்ல. அதையும் தாண்டிய விபரீதம்.
ஒற்றை ஜாதி ஆள்பலத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் கிராமங்களில் ஜாதிய குண்டர்படைகள் வாக்குச்சாவடிகளை தைரியமாக கைப்பற்றுங்கள் என்கிறார் அன்புமணி.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இப்படியானதொரு விபரீத யோசனையை இதுவரை பகிரங்கமாக பொதுமேடையில் இப்படி ஊக்குவித்ததில்லை.

தர்மபுரி இளவரசன்/திவ்யா என்கிற தனிமனிதர்களின் காதலில் தலையிட்ட விபரீதம் தான் அன்புமணியின் அரசியல் வரலாற்றில் ஆகப்பெரிய கீழ்மையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய அவரது விபரீத பேச்சு அன்புமணி அதையும் தாண்டி தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அனுபவமும் வயதும் முதிர்ச்சியை அதிகப்படுத்தி பொறுப்பை கூட்டவேண்டும்.
அதுவும் உயிர்காக்கும் மருத்துவம் படித்தவருக்கு இது முன்பே ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் ஏனோ அன்புமணியின் அரசியல் பரிணாமம் மோசத்தில் இருந்து படுமோசமாக போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு கட்சியின் தலைவர்; முதல்வர் வேட்பாளராக முன் நின்றவரின் அரசியல் இவ்வளவு விபரீதமாக போகும் என்றால் தமிழக அரசியலின் எதிர்காலம் உண்மையில் அச்சமூட்டுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக