வெள்ளி, 12 ஏப்ரல், 2019

நீங்க எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் ?.. இப்படியும் கண்டுபிடிக்க முடியுமா? (சிரிப்பதற்கு)

Samuel Manickam : நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி……
காட்சி -1 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டையை நின்று வேடிக்கை பார்த்துவிட்டு நடையைக் கட்டுகிறார்…
இது மும்பை நகரம்.
காட்சி -2 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டையை விலக்க முயலுகிறார்…
சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டுபேரும் சேர்ந்து மூன்றாவது ஆளை அடித்து நையப் புடைக்கிறார்கள்…
இது சென்னை நகரம்.
காட்சி -3 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். என் வீட்டுக்கு முன்னாடி நின்று சண்டை போடாதீங்க.. வேற எங்கேயாவது போங்க என்று அவர்களை விரட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிடுகிறார்.
அப்படீன்னா இது பெங்களூரு.

காட்சி -4 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டையை பார்த்துவிட்டு போய் ஒரு கேஸ் பீர் பாட்டிலோடு வருகிறார். மூன்று பேரும் உட்கார்ந்து நன்றாகக் குடித்துவிட்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளுகிறார்கள். போதை தெளிந்ததும் அவரவர் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள்……
இது கோவா நகரம்.
காட்சி -5 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் களைப்படைந்தவுடன், போனை எடுத்து நான்கு ஐந்து கால் பண்ணுகிறார்கள். உடனே நாற்பது ஐம்பது ஆட்கள் அங்கே வந்து பெரிய சண்டை மூளுகிறது…..
இது பஞ்சாப்.
காட்சி -6 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். துப்பாக்கியை எடுத்து இரண்டு ஆட்களையும் சுட்டுவிட்டு, பீடி குடித்தபடி நடையைக் கட்டுகிறார்…
இது பீஹார்.
காட்சி -7 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டை போடும் இருவரில் தன் சாதியை சேர்ந்தவர் யார் என்று விசாரிக்கிறார். சாதி தெரிந்ததும் மற்ற சாதி ஆளைப் போட்டு இருவரும் அடிக்கிறார்கள்…
இது ஆந்திரா.
காட்சி -8 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்கிறது,,….
அப்போது ஒரு ஆள் வந்து சின்னதா டீ கடை போட்கிறார். வியாபாரம் சூடு பிடிக்கிறது…
இதுதான் கேரளா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக