வெள்ளி, 12 ஏப்ரல், 2019

அய்யாகண்ணு அவர்களே, டெல்லியில் அம்மணமாக ஓடியது அமித் ஷாவைப் பார்க்கத்தானா? பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

THE HINDU TAMIL - : பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடனான அய்யாக்கண்ணு சந்திப்பைக் கிண்டல் செய்துள்ளார் சுப.வீரபாண்டியன்
டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அய்யாக்கண்ணு. இப்போராட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்களுடைய போராட்டம் எதற்குமே மத்திய அரசு தலைசாய்க்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் விவசாயிகள் 111 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்வது என்று அய்யாக்கண்ணு தரப்பில் முடிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தார் அய்யாக்கண்ணு.

பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது, “எங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் பாஜக வெளியிட்டுள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. எனவே, வாரணாசியில் மோடிக்கு எதிராகப் போட்டியிட மாட்டோம் என்ற உறுதியைத்தான் அளித்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் சுப.வீரபாண்டியன். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்திருப்பதாவது:
''அய்யாகண்ணு அவர்களே, டெல்லியில் அம்மணமாக ஓடியது அமித் ஷாவைப் பார்க்கத்தானா? அல்லது அம்மணமாக ஓடினால்தான் அமித் ஷா சந்திப்பாரா? தங்கமணி ரகசியம் நமக்குப் புரியவே இல்லை''. #விவசாயிகள்சங்கம்
இவ்வாறு சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக