செவ்வாய், 16 ஏப்ரல், 2019

அதிமுக கடந்து வந்த பாதையும் ..இன்று சேர்ந்திருக்கும் இடமும்

மு.ரா. விவேக் : எம்ஜியாருக்கு உடல்நிலை சரியில்லை கேபினட் கூட்டத்தில் கூட தன்னை அறியாமல் இயற்கை உபாதையை கழிக்கிறார் அவருக்கு பதில் என்னை முதல்வராக்குங்கள் என்று முதல் துரோகம் ஜெயாவால் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதபடுகிறது !
எம்ஜியார் ஜெயாவை அதிமுகவை விட்டே நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார் -அது அதிமுக அதிகாரபூர்வ நாளிதழிலும் வருகிறது !
bulk க்கா ஒரு அமௌன்ட் கொடுங்க நான் கண்காணா இடத்துக்கு போய் settle ஆகிடுறேன் ன்னு உயிருக்கு பயந்து எம்ஜியாருக்கு கடிதம் எழுதி அதுவும் பத்திரிக்கைகளில் வருகிறது !
எம்ஜியார் மறைகிறார் -சவ ஊர்வலத்தில் அந்த வாகனத்தில் ஏறி அமர
ஆசைப்பட்டு தாக்கப்பட்டு அந்த இடத்தை விட்டே துரத்தப்படுகிறார் !
சசிகலா-நடராஜன் entry !
ஜானகி அணி -ஜெயா அணி !
சேவல் -புரா -குத்துக்கள் எல்லாம் முடிந்து எம்ஜியாரின் மனைவிக்கு எமிஜியார் தொடங்கிய கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் ஆப்பு அடித்து -எம்ஜியாரின்.......ஜெயாவை தூக்கி தலைமை பொறுப்பில் அமரவைக்கிறார்கள் !
மீண்டும் காலம் உருண்டோடுகிறது !
ஜெயாவால் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கும் அளவு செல்வாக்கு பெற்ற சசிகலாவின் குடும்பம் ஒட்டு மொத்தத்தையும் ஒதுக்கி வைக்கிறார் புரட்சித்தலைவி!?இது தான் முதல் புரட்சி !
பின்னர் சசிகலா வோடு சிலரை மட்டும் மீண்டும் சேர்த்து நாடகம் தொடங்குகிறது !
வளர்ப்பு மகனின் அண்ணன் தினகரன்(குண்டாக இருந்த காலம்) MP யாக இருந்தார் !
மீண்டும் காலம் உருண்டோடுகிறது !
ஜெயா மறைகிறார் அல்லது மறைய வைக்கபடுகிறார் (இன்னமும் மர்மம் தான் !)

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை பேரா தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ மக்களுக்கும் இவரை மறந்து தொடர்பில்லாமல் இருந்தார்!
எடப்பாடி என்றால் பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் ஒரு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக சுவற்றோடு சுவராக ஒட்டி பல்லி போல் வாழ்ந்து வந்தார் மக்கள் தொடர்பில்லாமல் !
பன்னீர்-ஜெயா குற்றவாளியாக நிரூபிக்க பட்டு சிறை செல்லும் பொழுதெல்லாம் அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் குற்றவாளி ஜெயாவின் சார்பாக அமர்ந்து மும்மாரி பொழிய மூன்று முறை தமிழகத்தை ஆட்சி!? செய்தார்.
காலம் உருண்டோடி காலில்லாமல் மண்ணுக்குள் சென்ற பொழுது!
OPS +EPS +பேராகரன் ஓரணியில் நிற்பது போல் நிற்கிறார்கள் !
தேவர்மகன் பாணியில் ஜெயா வேடம் பூண்டார் சசிகலா.....முதல்வர் நாற்காலிக்கு பத்தடி தூரம் அமரும் தருணம் மக்கள் எல்லாம் கடும் கோபத்தில் இருந்த காலம்!
ஒபிஸ் சின் தர்மயுத்தம் !?
பேபி மா வின் புரட்சி!?
சசிகலாவின் காலில் உண்மையாகவே விழுந்து -எப்படி விநாயகர் பெற்றோரை சுற்றி வந்து பழத்தை பெற்றதை போல் நேர்வழியில்!? கூவத்தூர் மூலமாக மக்களை சந்தித்து முதல்வரானார் எடப்பாடி !
தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு சிறையை நோக்கி செல்கிறார் சசிகலா on the way யில் ஜெயாவின் சமாதியில் முரட்டுத்தனமாக மூணு அடி அடித்து சத்தியம் செய்து விட்டு போய்கிட்டே இருந்தார் !
சசிகலாவின் செருப்புக்கு அடியில் படுத்து கிடந்த ஒட்டுமொத்த மாண்புமிகுக்களும்-தர்மயுத்த நாயகனும் மீண்டும் ஒன்று சேர்ந்துகொண்டு சசிகலா-தினகரனை கட்சியில் இருந்து நீக்கி கட்சியை கைப்பற்றினார்கள் !
ராம- லட்சுமணன் போல் வாழ்ந்து வந்துகொண்டே இருந்த OPS +EPS இவருக்கு தெரியாமல் அவர்- அவருக்கு தெரியாமல் இவர் என்று காவி கூட்டத்தையும் தினகரனையும் மாறி மாறி யாருக்கும் தெரியாமல் சந்தித்து வருகின்றனர் !
இப்பொழுது
மூவரும் ஒருவருக்கொருவர் யாருன்னே தெரியாதுன்னு சர்வ சாதாரணமாக சொல்லி வருகிறார்கள் !
ஆகா மொத்தத்தில் சசிகலாவை மக்கள் மறந்து அவர் மீது இருந்த கோபங்களை மக்கள் மறந்து கொண்டே வருகிறார்கள் !
திவாகரன்
தினகரன்
பாஸ்கரன்
தீபா
மாதவன்
என்று அதிமுகவுக்கு உள்ளையே பல கட்சிகள் !?உருவாகி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும் ஒருவருக்கொருவர் இவரை யாரென்றே தெரியாது என்ற அரசியலை நடத்தி வருகிறார்கள் !
மாண்புமிகுக்கள் பெரும்பான்மை யானோர் ஆட்சி காலம் இருக்குற வரை அடிச்சு பணத்தை சேர்த்துக்கணும் ன்னு ஊழலில் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது !
மீண்டும் முதல் வரி !
எம்ஜியாரின் நூற்றாண்டு விழா கோலாகலமாக !?கொண்டாடும் வேளையில் பிடலும்- சேகுவேராவும் அந்த கோமாளி கூட்டத்தின்(கட்சியின்) கடைசி நாட்களை எழுதி முடிக்க வீறுநடைபோட்டு நடக்கிறார்கள் !
அம்புட்டுதான் அதிமுகவின் வரலாறு -இடையில் ஆசிட்-மகாமகம்-கின்னஸ் கல்யாணம்-கஞ்சா வழக்குகள்-ஊழல் செய்து சிறை....எல்லாம் extra மசாலாக்கள் !
30 ஆண்டு தமிழகத்தை ஆண்ட எம்ஜியார்-ஜானகி-ஜெயா-பன்னீர்-எடப்பாடி யின் அதிமுகவின் வரலாறு இவ்வளவு தான் !
தேடி பார்த்தாலும் உண்மையில் தெரியாதது அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் தான் !
எல்லாத்தையும் மீறி !
ஒரு பத்து வேணாம் ஒரு அஞ்சு தொலைநோக்கு திட்டங்கள்-மக்கள் நல திட்டங்கள் வரிசையாக எந்த ரத்தத்தின் ரத்தத்திடமாவது சொல்லுங்கள் என்று கேட்டு பாருங்கள் -குடும்ப கட்சி-விஞ்சான ஊழல் ன்னு சொல்லிட்டு அவுங்க தலைவன் ராமச்சந்திர் ஆரம்பித்த டாஸ்மாக் நோக்கி ஓடுவார்கள்!
அதிமுக என்பது மானமற்ற -அடிமைத்தனம் கொண்ட கொள்கையற்ற ஒரு கோமாளிகளில் கூடாரம் என்று சொன்னால் அது மிகையல்ல !
மீண்டும் காலம் மாறாது தமிழகமே மாறும்-அதிமுக மெல்ல அல்ல விரைவில் அழியும்!
வெறும் அதிமுகவின் வாக்கு வங்கிக்காக மக்களை காவி பிஜேபியிடம் அடகுவைத்து கூட்டணி( பேரம் )செய்து இருக்கும் பாமகவும்-தேமுதிகவும் ஒரு சேர வீழ்வது உறுதி!
சூரிய ஒளியில் தீயவை அழியும் !
நிச்சயம் !
(மீள்பதிவு )
மு.ரா. விவேக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக