செவ்வாய், 16 ஏப்ரல், 2019

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தார் ... எப்படி இருக்கிறார் ? வீடியோ


மாலைமலர் :சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து  வரும் 15ந்தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம்  செய்வார் என கூறினார்.


இதன்படி, சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக