வியாழன், 4 ஏப்ரல், 2019

போலீஸ் வாகனத்தில் ஆளுங்கட்சியினர் பணம் கடத்தல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

tamil.thehindu.com : தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் சாதாரண பொதுமக்கள் வாகனத்தைப் பிடித்து சோதனையிடுகிறார்கள். காவல்துறை வாகனத்தில் ஆளுங்கட்சியினர் பணம் கடத்துகிறார்கள். காவல்துறை வாகனங்களையும் பிடித்து சோதனையிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு: ''தற்சமயம் வாட்ஸ் அப்பில் செய்திகள் வருகின்றன. காரில் வருகின்ற பொழுது நான் பார்த்தேன். காவல்துறை வேனில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு போவதாக செய்தி.

போனமுறை ஆம்புலன்ஸில் பணத்தை எடுத்துக்கொண்டு போனார்கள். அன்புநாதன் வீட்டிலும் அரசு ஆம்புலன்ஸ் இருந்தது. எனவே இந்த முறை காவல்துறையில் பயன்படுத்தப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சாலையில் செல்லும் எல்லா காரையும் வழிமறித்து நிறுத்தி வருகிறீர்கள்.
அது கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய மக்களின் காரையும் நிறுத்துகிறார்கள். வியாபாரிகளின் காரையும் நிறுத்துகிறார்கள். 1 லட்சம், 20 ஆயிரம், 50 ஆயிரம் இருந்தால் சோதனை போடுகின்றார்கள். அதற்காக கணக்கு காட்டச் சொல்கின்றார்கள். கணக்கு இருந்தால் திருப்பிக் கொடுத்து விடுகின்றார்கள்.
நான் அதை தவறு என்று சொல்லவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் காவல்துறையை வைத்து பணத்தை கொண்டு செல்கின்றார்கள் என்று நாங்கள் சொல்கின்றோம்.
ஏனென்றால், தலைவர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் காவல்துறை என்பது போற்றத்தக்க சிறப்புத் துறையாக இருந்தது. இப்பொழுது இந்தக் காவல்துறை இந்த ஆட்சியின் ஏவல் துறையாக மாறி இருக்கின்றது. அதற்கு பல உதாரணங்கள். அதில் ஒரு உதாரணம் தான் பொள்ளாச்சி உதாரணம்.
தேர்தல் கமிஷனுக்கு ஒரு எச்சரிக்கை. பொள்ளாச்சியில் நடைபெறக்கூடிய இந்தப் பொதுக்கூட்டத்தில் நின்று கொண்டு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். காவல்துறை வாகனத்தையும் சோதனையிட வேண்டும்.
அதை சோதனையிடவில்லை என்று சொன்னால், நாங்கள் அல்ல இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வாக்காளர்களே வாகனத்தை வழிமறித்து சோதனையிடத் தயாராக இருக்கின்றார்கள். அப்படி ஒரு நிலைமை வரப்போகின்றது. அந்த நிலைக்கு எங்களைத் தேர்தல் ஆணையம் விடாது என்று நாங்கள் நம்புகின்றோம்.
அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நீங்கள் அதற்குத் துணை நிற்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாத்திட வேண்டும்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக