வியாழன், 4 ஏப்ரல், 2019

கூடலூரில் ஓ.பி.எஸ். பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து.. அதிமுகவினர் தாராளமாக சேலைகள் விநியோகம்

பன்னீர்செல்வத்தின் தம்பி  சேலை விநியோகம்
இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை அதிமுகவினர் விநியோகம்.. துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தம்பி ஓ.ராஜா
அவர்களும், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் அவர்களும் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ரவிந்திரநாத் அவர்களின் சார்பாக  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். 
vikatan.com - கே.அருண் நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் நேற்று இரவு ஊட்டி வந்திருந்தார். இன்று கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், காலை ஊட்டியிலிருந்து கிளம்பினார். அவரது பிரசார வாகனமும் முன்னே கிளம்பியது. கூடலூர் நோக்கி வந்தபோது நடுவட்டம் அருகே பிரசார வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து வாகனத்தைத் தூக்கி சமநிலைக்குக் கொண்டுவந்தனர். கூடலூர் சென்றபின் பிரசார வாகனத்தில் ஏற ஓ.பி.எஸ். முடிவு செய்திருந்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக