சனி, 6 ஏப்ரல், 2019

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொலை:உடல் சாலையில் ...

murder pollachi college girl murdernakkheeran.in - kalaimohan : கோவை பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பிரகதி என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டள்ளார்.& கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அதனையடுத்து கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை இப்படி பரபரப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது சாலையில் மாணவி கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டது மேலும் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் கூட்டியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
tamil.asianetnews.com/author/selvanayagam-p/ : பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் முட் புதருக்குள்  கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, பாலியல் சம்பவம், ஆபாச படம் என கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி லைட்டில் இருந்து வருகிறது. பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதே போல் கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சந்தோஷ்எனபவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரகதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரகதியின் பெற்றோர் இன்று காலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் பிரகதி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் பிரகதி அரைநிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த  காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே  பாலியல் கொலை, ஆபாச படம் என கடந்த சில நாட்களாக பரபரத்துக் கிடந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் அப்பகுதியை சூடாக்கியுள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக