வியாழன், 4 ஏப்ரல், 2019

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்

Pattukkottai Kalyana Sundarams wife died tamil.oneindia.com - hemavandhana : சென்னை: 'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி கெளரவம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
தேனினும் இனிமையான பாடல்கள்தான்.. ஆனால் ஒவ்வொன்றும் தத்துவம் நிறைந்த பாடல்களை தந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பலமான சமூக சீர்திருத்த கருத்துக்களை கூட எளிய தமிழில் தனது பாட்டால் உணர்த்தியவர். பத்தாண்டு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாட்டெழுதினார். சிந்தனைத் தெளிவும், கருத்துச் செறிவும் நிறைந்த பாடல்கள் இன்றும் காலத்தில் அழிக்க முடியாத சிறப்பை பெற்றவை. அதனால்தான் அவை அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.


விவசாயி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, அரசியல்வாதி, கவிஞர் என 17 பரிமாணங்களில் அன்று மிளிர்ந்தவர்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரது மனைவி கெளரவம்மாள். கல்யாண சுந்தரம் இவரை கல்யாணம் செய்து வெறும் 5 மாதங்கள்தான் ஆகி இருக்கும்.. தன்னுடைய 29 வயதில் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது கௌரவம்மாள் கர்ப்பிணியாக இருந்தார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில்தான் கௌரவம்மாள் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்தார். 80 வயதான இவர் வயது மூப்பு மற்றும் உடல் நல கோளாறு காரணமாக கடந்த 6 மாதங்களாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடல் சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக