வியாழன், 4 ஏப்ரல், 2019

3000 ஆண்டுகள் ..ஆதிச்சநல்லூரில் பொருள்களில் ஒன்று கி.மு. 905, மற்றொன்று கி.மு 791 .. திராவிடர்களே மூத்த குடி.. கார்பன் டேட்டிங் நிருபணம்


திணையகம் : ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களில் இரு பொருட்களின் கரிம ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் அறிக்கையாக தந்தது இந்திய ஒன்றிய அரசு.
 நாகரீகம் என்ற உண்மையை குழிதோண்டி புதைத்து ஆரியர்களே மூத்தவர்கள் என பிதற்றி வரலாற்றைத் திரித்து எழுதி வைத்திருந்த திருடர்களுக்கு தேள் கொட்டியது போல, மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கண்டிப்பான ஆணையை அடுத்து வேறுவழியில்லாமல் இன்று கொடுத்த ஆய்வறிக்கையில் இரு பொருட்களின் வயதைச் சொல்லியுள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதன்படி ஒரு பொருள் பொது ஆண்டு முன் 905 என்றும் மற்றொரு பொருள் பொது ஆண்டு முன் 791 எனச் சொல்லியுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வளர்ச்சியடைந்த,சிறந்த வளர்ச்சியடைந்த மொழிக்கு சொந்தக்காரன் தமிழன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வை ஒன்றிய அரசு தொடருமா அல்லது தமிழக அரசுக்கு அதற்கான அனுமதியைத் தருமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்தியாவின் மூத்தமொழி தமிழ் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரலாற்று உரிமை வென்றே தீரும்.
(படத்தில் உள்ள 971 தவறு. 791 என்பதே சரி)
=======================
நியூஸ் 18 செய்தி கீழே.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களில் ஒன்று கி.மு. 905, மற்றொன்று கி.மு 791 காலகட்டத்தைச் சேர்ந்தது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டது போல, பரம்பு உள்ளிட்ட சில இடங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வு மாதிரி பொருட்கள் அமெரிக்காவுக்கு கார்பன் பரிசோதனைக்கு அனுப்பட்ட ஒரு பொருளின் வயது கிமு 905, மற்றொரு பொருளின் வயது கி.மு 791 என தெரியவந்துள்ளதாக மத்திய தொல்லியல் துறை, தெரிவித்தது.தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்று மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணையில், 16 ஆண்டுகளாக ஆன பிறகும் ஏன் இது வரை அறிக்கை சமர்பிக்க வில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

3 கருத்துகள்:

  1. இனத்தின், மொழியின் வரலாற்றை எவராலும் " நடுவிலே சில பக்கங்களை காணோம்" என்று சொல்லி ஏமாற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
  2. தமிழர் தொன்மங்கள் சரியான தமிழர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லாரும் தமிழுக்கு செய்யும் கொடுமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. https://www.facebook.com/thontamilarnagarigam சிந்து சமவெளியில் தமிழர் தொன்மம் கிமு 9500 சான்று இருந்தும் தமிழ் மக்கள் சரியான நடவடிக்கை திட்டமிடல் மேன்னேடுத்தல் இன்றி வாழ்கிறார்கள்

    பதிலளிநீக்கு