சனி, 27 ஏப்ரல், 2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புதொடர்பு.....எஸ் பி திசாநாயகா

தினகரன் .lk :புனித ஈஸ்டர் திருநாளன்று தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத மற்றும் அடிப்படைவாதிகளுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது பற்றித்தெரதிவித்த அவர், குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் மொஹமட் இப்ராஹிம் பாரிய வர்த்தகர். அவருடன் ரிஷாட் பதியுதினின் தம்பி இணைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவரது அமைச்சிலும் இவர் பணிப்புரிந்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தங்கையை திருமணம் முடித்துள்ளவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டு தாக்குதல் முயற்சியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரென்றும் அவர் கூறியுள்ளார். மன்னார் பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் காணி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
thinakaran.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக