செவ்வாய், 16 ஏப்ரல், 2019

நான் இந்த குலத்தில் பிறந்து இருக்கிறேன் நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள்? ..

Shalin Maria Lawrence : மாற்று அரசியல் என்பது இங்கே மிக மிக தேவையான ஒன்றுதான். இந்த தேர்தலில் மாற்று அரசியலை முன்மொழிந்து இருப்பது இரண்டு கட்சிகள்தான். மய்யமும் ,நாம் தமிழர் கட்சியும். ஆனால் இவர்களின் உண்மை நிலை என்ன? முதலில் மய்யத்துக்கு வருவோம்.
மக்கள் நீதி மய்யம்.
பெயரிலேயே மய்யம்.பெயரிலேயே ஏமாற்று வேலை.சமூகநீதிக்கு இரண்டு பக்கம்தான். ஒன்று சரி ,இன்னோன்று தவறு .
நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் "இரண்டுக்கும் நடுவில்" என்று சொல்பவன் தீயவனை விட தீயவன்.
"சாதி விளையாட்டு வேண்டாம்" என்கிறார் கமல்.
"சாதி பற்றி எல்லாம் பேச மாட்டேன்" என்கிறார் .
ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் கிழத்துக்கு இங்கே இந்தியா என்கிற நாட்டில் ஜாதிதான் முதல் தீங்கு ...ஜாதிதான் பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு ,ஆரோக்கியம் ,வளங்கள் என்று எல்லாவற்றையும் இயக்குகிறது என்று தெரியாதா? ஜாதிதான் இந்தியாவின் 2000 காலத்து மிக முக்கிய ஊழல் என்று தெரியாதா?
சாதி சான்றிதழை கிழித்து போடு என்று சொல்லும் ஒரு அறைவேகாட்டிற்கு ஒரு கட்சியை வழிநடத்தும் ,மக்களை ஆளும் யோக்கியதை இருக்கிறதா?
திராவிட கட்சிகள் மாநிலங்களை சீரழித்து விட்டது என்கிறார்.சரி.
பின்பு ஏன் அப்பொழுதே கலைஞரையும் ,ஜெயலலிதாவையும் கேள்வி கேட்க வில்லை?

கலைஞரால் கொடுக்கப்பட்ட எல்லாம் வாய்ப்புகளையும் அனுபவித்து கொண்டு ,அரசு விழாக்களில் முன் சீட்டுக்களில் அமர்ந்து கொண்டு இருக்கும்போது இதெல்லாம் தோன்றவில்லையா?
அப்பொழுது கமல் யார்? அவர் ஒரு ஆக சிறந்த சந்தர்ப்பவாதி. தனக்கு காரியம் ஆக யாரை அண்டி பிழைக்க வேண்டும் என்று நன்கு அறிந்த அக்மார்க் சந்தர்ப்பவாதி.
மோடி அழைத்ததும் குடுகுடு என்று ஓடி போய் ஸ்வச் பாரத் என்கிற சனியன் பிடித்த பொய் விஷயத்திற்கு தூதுவராக போய் மோடியை புகழ்ந்தார் கமல்.அதற்கு முன்பு நாட்டில் பல வருடகலமாக இருக்கும் கையால் மலம் அள்ளுபவர்களை பற்றி யோசித்து இருக்கிறாரா? பேசி இருக்கிறாரா? போராடி இருக்கிறாரா?
நாட்டில் என்ன பிரச்சனை என்றே தெரியாது ஒரே மாதம் ஊர் சுற்றிவிட்டு இதுதான் அரசிடம் பிரச்சனை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் கமல் மனதில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் காரணம் அவர் மனதில் ஆழ ஊடுருவி இருக்கும் அவர் ஜாதி தான். நான் இந்த குலத்தில் பிறந்து இருக்கிறேன் நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்கிற நினைப்பு இருக்கிறதே இதற்கு பெயர்தான் "caste priviledge".
திருமாவளவன் பிடிக்கும் இருந்தாலும் கமலுக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்பவர்களும் கமலின் இந்த ஜாதிய தகுதியால் brainwash செயப்பட்டவர்கள்தான்.
நம் திருமணங்களில் ஐயர் வந்து சமைத்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்களே அப்படி.
கமல் பகுத்தறிவாதி கிடையாது.
கமலுக்கு சமூக அரசியல் அறிவு கிடையாது.
கமல் retirement option போல் அரசியலுக்கு வந்து இருக்கிறார்.தொடர் பட தோல்விகள் ,பணமின்மை காரணம்.
பல வருடகாலமாக இங்கெ இருக்கும் சமூக கொடுமைகளை ,தோய்ந்து கொண்டிருக்கும் மாநில அரசியலை கேள்வி கேட்டு மாற்றும் தகுதியோ இல்லை த்ராணியோ கமலுக்கு இல்லை.
Highly incapable to tackle current social evils.
கமல் - மாற்று அரசியல் எனும் பெயரில் ஏமாற்று அரசியல் செய்பவர்.
ஆகவே கமலுக்கு ஓட்டு போடுவது என்பது இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இன்னொரு பிரச்னையை சேர்த்து கொள்ளுவது போல.
பின்பு கமலை ஒழித்துக்கட்ட இங்கே இன்னொரு மாற்று அரசியல் தேவைப்படும்.
இதெல்லாம் தேவையா?
தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக