வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அப்பாவிக் கிழவிகளின் கூரைகளை அடித்து உடைப்பதா வீரம்? இந்தியர்கள் கண்டுபிடித்த ஜாதி அடுக்கு முறை ..

Mahalaxmi : உங்கள கெட்ட பெயர் எடுக்க வைத்து அடியாளா கலவரக்காரர்கள் என்று பெயர் வாங்கி கொடுத்துட்டு இவன் குடும்பம் மட்டும் படித்தால் போதும் வாழ்ந்தா போதும்
அன்புமணி குடும்பமும் ஊரார்வீட்டு செல்வங்களும்
டான் அசோக் : உலகத்தில் வெள்ளைக்காரன் ஏதேதோ கண்டுபிடித்து
வைத்திருக்கிறான். அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் உபகரணங்களில் இருந்து அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படும் பெரிய உபகரணங்களில் இருந்து உயிர்காக்கும் தடுப்பூசிகள் வரை. எல்லாமே பலநூறு ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியின் பலன்கள். ஒருபக்கம் நிறவெறி, காலனி ஆதிக்கம் என பல விஷயங்களைச் செய்துவந்தாலும் இன்னொரு பக்கம் இதையெல்லாம் கூட தொடர்ந்தே வந்திருக்கிறான். இப்போது நிறவெறி, காலனியாதிக்கம் எல்லாம் அவர்கள் வெட்கப்படும் விஷயங்களாக மாறியிருக்கிறது. அரசாங்கங்கள் மறைமுகமாகச் செய்கிறதேயொழிய பெரும்பான்மையான தனி மனிதர்கள் அதை அருவெறுப்பாகப் பார்க்கும் காலம் வந்துவிட்டது. இன்னொருபக்கம் நாம் இருக்கிறோம். இந்தியா இருக்கிறது. நம் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் இருக்கிறது.

இங்கு மனிதனை மனிதன் எப்படி அடிமையாகவே வைத்திருப்பது, ஒரு சிறிய சமூகம் மட்டும் எப்படி சமூகநிலையின் மேல்பகுதியிலேயே தங்கியும், தேங்கியும் கொண்டு, உண்டு கொழுப்பது என்பதற்கு, பல்லாண்டுகள் ஆராய்ச்சி செய்து மனுதர்மத்தை, வர்ணாஸிரமத்தைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள், இந்துமதத்தைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். கீழ் அடுக்குகளில் இருபவர்கள் அடித்துக்கொண்டே இருக்கும்வரை மேலேயிருப்பவனுக்குக் கவலை இல்லை!

வேதகால விமானம், ப்ளாஸ்டிக் சர்ஜரி, மயிரு, மட்டை எல்லாம் வேதகாலத்தில் கண்டுபிடித்தோம் எனச் சொன்னாலும், அதற்கெல்லாம் ஒரு ஆதாரமும் இல்லை, பிள்ளையார் பொம்மைகளைத் தவிர!!
ஆனால் அவர்கள் கண்டுபிடித்த வர்ணாசிரம தர்மமும், இந்துமதத்தின் முதுகெலும்பான சாதிய அடுக்கும் இன்னும் இருக்கிறது என்பதற்கு அன்றாடம் நமக்கு ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் வெள்ளைக்காரர்கள் போல நம் ஆட்கள் அதை நினைத்து வெட்கப்படுவதாக இல்லை. மாறாக பெருமை கொள்கிறார்கள். மதவாதம், சாதிப்பெருமை, ஏன், தேசபக்தி எனும் பெயரில் கூட இந்தக் கருமத்தை வளர்க்கும் கூட்டம் இங்குதான் இருக்கிறது. அமெரிக்காவில் கூட KKK போன்ற ஆரிய நிறவெறி பயங்கரவாத அமைப்புகள் உண்டுதான். ஆனால் அவை RSS போல பொதுவில் வலம் வருபவை அல்ல. பாஜக என்கிற முகமுடி பெயரில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு உடையவையும் அல்ல.
ஆனால் இங்கு 2019ஆம் ஆண்டிலும் ஒரு ஊரின் தெருவில் ஒரு சாதிவெறிக்கூட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளையும், கூரைகளையும் அடித்தும், உடைத்தும், சாதிப்பெருமை பேசியபடி ஓடியும் கொண்டிருக்கிறது. சாதிப்பெயரைச் சொல்லி திட்டியபடி ஓடுகிறது. உடைக்கிறவனோ, திட்டுகிறவனோ எல்லாம் பணக்காரன் இல்லை. அவனுக்கும் அடுத்த வேலை சோறு இருக்காது. பிள்ளையைப் படிக்க வைக்க காசு இருக்காது. பொண்டாட்டிக்கு உடம்புக்கு முடியாமல் வந்தால் காசுக்கு அலைவான். அவன் குழந்தை டாக்டர் ஆவதைத் தடுக்கவும்தான் 'நீட்' கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் தனக்குக் கீழ் ஒருவன் இருப்பதாகவும், அவனை அடக்குவதில் கிடைக்கும் சாடிச இன்பமும் மட்டுமே வாழ்க்கை முழுமைக்கும் போதுமானதாக அவன் சிறுவயதில் இருந்தே நம்பவைக்கப்படுகிறான்.
நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மனிதனை அடிமைப்படுத்த, முட்டாளாக்க இப்படி ஒரு சமூகக் கட்டமைப்பு எந்த நாட்டிலும் உருவாக்கப்படவில்லை. இவ்வளவு தந்திரமாக எந்த ஆதிக்கச் சமூகமும் யோசிக்கவுமில்லை, இந்தியாவுக்கு வந்த ஆரியர்களைத் தவிர! அதனால்தான் இரண்டு அடுக்கு நிறவெறியை விடவும் பல அடுக்கு சாதிவெறி நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
கசங்காத உடை உடுத்தி பென்ஸ் காரில் வருகிறவர்கள் சாதிப்பெருமையை அவனுக்கு ஊட்டுகிறார்கள். என்றாவது அவர்கள் தெருவில் இறங்கி ஓடுகளை உடைத்திருக்கிறார்களா? குடிசையைக் கொளுத்தியிருக்கிறார்களா? அல்லது அவர்களின் சட்டை ஓரமாக கொஞ்சம் அழுக்குத்தான் பட்டிருக்குமா? இல்லை அவர்கள் வெட்டுப்பட்டிருக்கிறார்களா? வெட்டியிருக்கிறார்களா? போலீஸிடம் அடிவாங்கி இருக்கிறார்களா? டயர் நக்கிகளின் டயரை நோகாமல் நக்கிக் கொண்டிருக்கிறார்கள்!!!
பார்ப்பனச் சாதிச்சங்கங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள ஆரம்பிக்கப்பட்டவை. அவை இன்றைக்கு இந்துத்துவா என்கிற பெயரில், பாஜக எனும் பெயரில், RSS எனும் பெயரில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஏனைய சாதிகளை எல்லாம் அடிமைகளாக்கி, தங்கள் நோக்கத்துக்கு ஊழியம் செய்யவைத்து நன்றாக வேலை செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் பிற சாதிச்சங்கங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. தனக்கு மேலே இருப்பவன் தன் மீது செலுத்தும் ஆதிக்கத்தை வேரறுக்க ஆரம்பிக்கப்பட்டவை. தன் சாதியினரை முன்னேற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் இன்று அவை தனக்குக் கீழே இருப்பவர்கள் எனத் தாங்கள் கருதும் சாதிக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவ மட்டுமே பயன்படுகின்றன. இதற்கு வாழும் ஆதாரமாகத்தான் ராமதாஸும், அவர் மகன் அன்புமணி இருக்கிறார்கள்.
நான் இன்னமும் ராமதாசை நம்பும் வன்னிய சமூகத்து நண்பர்களைக் கேட்கிறேன். கட்டக்கடைசியாக உங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு ராமதாஸ் என்ன நன்மை செய்தார்? கடைசியாக சமூகத்தின் வளர்ச்சிக்கு, கல்விக்கு, பொருளாதார முன்னேற்றத்திற்கு அவர் குரல் கொடுத்தது எப்போது? நீட் தேர்வினால் எத்தனை வன்னிய சமூகத்து மாணவர்கள் தங்கள் கனவை இழந்திருப்பார்கள்? ஆனால் உங்கள் அய்யா என்னய்யா செய்தார்? ஆனால் சாதிப்பெயர் சொல்லித் திட்டிக்கொண்டு ஓடுகிறீர்களே, அந்தச் சாதியைச் சேர்ந்த திருமாவளவன் தான் நாளை உங்கள் சமூகத்து மாணவர்களுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறார். அவர் சார்ந்த கூட்டணியின் குரல்தான் நாளை உங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சேர்த்து தொண்டு செய்யப்போகிறது. இதையெல்லாம் கொஞ்சம்கூட சிந்திக்க மாட்டீர்களா? கடைசிவரை அடியாட்களாக இருந்து, ஓட்டுப் போடும் இயந்திரங்களாக இருந்து சாகப் போகிறீர்களா? ராமதாஸ், அன்புமணியை டாக்டர் அய்யா என அழைக்கிறீர்களே, உங்கள் குழந்தைகள் டாக்டர்கள் ஆக வேண்டாமா?
இதையெல்லாவற்றையும் விட அப்பாவிக் கிழவிகளின் கூரைகளை அடித்து உடைப்பதா வீரம்? ஹ்ம்ம்ம்? கல்வி, சமூக, பொருளாதார அடக்குமுறைகளில் இருந்து மீண்டெழுந்து வாழ்வதல்லவா வீரம்!!! ஆனால் எவ்வளவு சொன்னாலும் கடைசியில் அந்த சாதிச்சாக்கடை வந்து கண்ணையும், காதையும் அடைக்கும். ஆனால் அதற்காகச் சொல்வதை நிறுத்தப் போவதில்லை. சொல்லிக்கொண்டேதான் இருக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் எச்.ராஜாக்கள், ராமதாசுகள், எஸ்.வி.சேகர்கள், RSS எஜமானர்கள் எவருக்கும் அடியாட்களே கிடைக்காமல் போகும்வரை சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக